»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திரையுலகில் வினியோகஸ்தராக வாழ்க்கையைத்தொடங்கி, தயாரிப்பாளராகி , ஹீரோவாக வளர்ந்தவர் ராஜ்கிரண்.

16 வயதினிலே படத்தை சென்னையில் வினியோகம் செய்த காதர் தான்இந்த ராஜ்கிரண்.

என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, மாணிக்கம் படங்களின் மூலமாக டாப் ஹீரோ இமேஜ்க்கு உயர்ந்தவர். உச்சத்தைத் தொட்டவர்.

சமீபகாலமாக கடனாளியாக நொடித்துப் போய்விட்டார். மறுபடியும் ஒரு வாழ்வு, பாரதிராஜாவின் மூலமாக வந்திருக்கிறது. சிவசக்தி பாண்டியன்தயாரிக்கும், பாரதிராஜா இயக்கும் கடல் பூக்கள் படத்திற்கு அடுத்து பாரதிராஜா மானஸ்தன் என்கிற படத்தை இயக்க இருக்கிறார்.

மானஸ்தன் படத்திற்கு கதாநாயகனாக ராஜ்கிரணை புக் செய்திருக்கிறார் பாரதிராஜா. மானஸ்தனில் ஒரு ஸ்பெஷலும் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு பல துருவங்கள் இணைகின்றன. இசைஞானி இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவியரசு வைரமுத்து ஆகியோர் இணைந்துசெயல்படப்போகிறார்கள்.

கலக்குங்க ராஜாக்களே. எவ்வளவு நாளாச்சு உங்களை சேர்த்துப் பார்த்து. பாரதிராஜாவின் மகன் மனோஜூம் இந்த படத்தில் உண்டு (அப்டிப் போட்தாக்கு).

Read more about: barathiraja, cinema, ilayaraja, vairamuthu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil