»   »  முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்

முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீதேவி இறந்து ஒரு வாரமாகிவிட்டாலும் அவர் இல்லை என்பதையே பலராலும் இன்னும் நம்ப முடியவில்லை.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தார். மும்பை கொண்டு வரப்பட்ட அவரின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலை பார்த்தபோதிலும் பலரால் அவர் இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை.

புகைப்படம்

புகைப்படம்

80கள் மற்றும் 90களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். தனது அழகாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதேவி.

அசத்தல்

அசத்தல்

ஸ்ரீதேவி நடிப்பில் மட்டும் அல்ல நடனத்திலும் வல்லவர். ஸ்ரீதேவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டும் என்றாலே தனக்கு பதட்டமாக இருக்கும் என்று பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்தார்.

அழகு

அழகு

ஒரு சாதாரண கவுன் போட்டு மேக்கப் போட்டாலே ஸ்ரீதேவி கொள்ளை அழகாகத் தெரிவார். அவர் திரையில் வந்தால் ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தார்கள்.

டோலிவுட்

டோலிவுட்

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகை ஆண்டவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை

கதை

ஸ்ரீதேவியின் கண்ணே கதை பேசுமே என்பார்கள் ரசிகர்கள். கண்ணழகி என்று கூட அழைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. பெரிய கண்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பாலிவுட் பக்கம் போன ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அவர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கியது உண்டு.

திருமணம்

திருமணம்

பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்களுக்கு தாயானார்.

தூரம்

தூரம்

கணவர், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக பல ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்தி வைத்தார் ஸ்ரீதேவி. 2012ம் ஆண்டு வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க வந்தார்.

ஏக்கம்

ஏக்கம்

இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஸ்ரீதேவியை அனைவரும் கொண்டாடினார்கள். அதை பார்த்த சீனியர் நடிகைகள் நமக்கு இப்படி ஒரு படம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள்.

செட்

செட்

ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பொழுதும் அமைதியாக இருப்பார் ஸ்ரீதேவி. சிறு வயதில் இருந்தே அவர் செட்டுக்கு வந்துவிட்டால் சீரியஸாகிவிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
We've collated some really good, classic and rare pictures of Sridevi right from the 80s and 90s and you'll cherish the good old days and wish they'd come back. These nostalgic images will make you feel that Sridevi should just come back too!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil