twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சையுடன் கலக்கும் 'தி கிங்டம்'

    By Staff
    |
    Click here for more images

    பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கிங்டம் என்ற ஹாலிவுட் படம் கத்தாரில் பெரும் வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடிக் கொண்டுள்ளது.

    அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. செளதியில் அமெரிக்கர்கள் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த எப்.பி.ஐ குழு ஒன்றை செளதிக்கு அனுப்பி வைக்கிறது.

    முக்கியத் தீவிரவாதியைப் பிடிக்க வந்த இடத்தில் செளதிபோலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் மூளுகிறது. இதுதான் தி கிங்டம் படத்தின் கதை.

    ஜெமி பாக்ஸ் சிறப்பு எப்.பி.ஐ அதிகாரி ரோனால்ட் ப்ளூரி வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜெனிபர் கார்னர், கிறிஸ் கூப்பர், ஜேசன் பேட்மேன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    பீட்டர் பெர்க் இயக்கியுள்ளார். மாத்யூ மைக்கேல் கர்னஹான் திரைக்கதையை வடித்துள்ளார்.

    இந்தப் படத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இருப்பதாக கூறி பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் இந்தப் படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், கத்தாரில் இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்படவில்லை. கத்தாரில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதுகுறித்து கத்தார் பல்கலைக்கழக மாணவர் ஹிந்த் அல் சுலைதி கூறுகையில், இப்படிப்பட்ட கூட்டத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. குறிப்பாக இளம் வயதினர் இந்த அளவுக்கு ஒரு படத்தைப் பார்க்க திரண்டு வந்தது இதுவே முதல் முறை என்றார்.

    ரீம் அயே என்பவர் கூறுகையில், செளதி குறித்த படம் என்பதால்தான் இந்த அளவுக்குக் கூட்டம் வந்துள்ளது. படத்தின் கதை கத்தார்வாசிகளைக் கவர்ந்து விட்டது என்றார்.

    ஆயிஷா சலே என்பவர் கூறுகையில், எங்களைப் (வளைகுடா) பற்றிய படம் இது. எங்களைப் பற்றி அமெரிக்கர்கள் என்னதான் கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமே என்றுதான் படம் பார்க்க பலரும் அலை மோதுகிறார்கள் என்றார்.

    கடந்த 1996ம் ஆண்டு செளவூதியில் உள்ள கோபர் டவர்ஸ் என்ற இடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 19 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தி கிங்டம் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தால் அமெரிக்கர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும் என பெரும்பாலான அரேபியர்கள் கருதுகின்றனர். இதனால் சில நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: controversial thekingdom
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X