»   »  தலித் பெண்கள் படத்துக்கு விருது

தலித் பெண்கள் படத்துக்கு விருது

Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 10 தலித் பெண்கள் இணைந்து தயாரித்த படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் பஸ்தாபூர் என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த சாதனையை செய்துள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பத்து பெண்கள் இணைந்து பெண் கல்வி தொடர்பான ஒரு டாக்குமெண்டரியை எடுத்துள்ளனர்.


தக்காண முன்னேற்ற சமுதாயம் என்ற அமைப்புதான் இதற்கான ஊக்கத்தையும், உதவியையும் அளித்ததாம். இந்த நிறுவனத்தின் சமூக ஊடக அறக்கட்டளை என்ற பிரிவின் மூலம் இந்த டாக்குமெண்டரி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் விசேஷம் என்னவென்றால் இந்தப் படத்தை இயக்கிய பத்து பெண்களுக்கும் படிப்பறிவு கிடையாது, சினிமா என்றால் என்னவென்று தெரியாது. வீடியோ என்ற வார்த்தையைக் கூட கேட்டது கிடையாது.

அப்படிப்பட்ட இந்த பெண்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு கல்வி குறித்த இந்த டாக்குமெண்டரியை இயக்கியுள்ளனர்.

6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இப்படம் அகில இந்திய வீடியோ டாக்குமெண்டரி படங்களுக்கான தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டது. அதில் இந்தப் படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

இது தலித் சமுதாயத்துக்குக் கிடைத்த வெற்றி என்று படத்தைத் தயாரிக்க உதவிய அமைப்பு கூறியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil