»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான ஹீரோ காலடி எடுத்து வைக்கிறார்.


டான்ஸர் படத்தில் குட்டி, ராபர்ட் மற்றும் கனிகா
ஒற்றைக் காலை மட்டுமேகொண்டாலும் நடனத்தில் பிய்த்து வாங்கும் குட்டி என்ற ஹீரோ டான்ஸர் என்ற படத்தில் அறிமுகமாகிறார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கேயார் தான் இந்த குட்டியை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

பார்க்கவும் அட்டகாசமாய் இருக்கும் குட்டிக்கு பரதநாட்டியமும் வெஸ்ட்டர்ன் டான்சும்அத்துப்படியாம்.

20 வயதான குட்டியுடன் ஹீரோயினாக கனிகா நடிக்கிறார்.

சிருடி பாபா ஆலயத்திலி நடந்த படத்தின் துவக்க விழாவில் இந்த வாலிபரை உற்சாகம் தந்து நடிக்க வைக்கஇயக்குனர் சிகரம் ஸ்ரீதர், பஞ்சு அருணாச்சலம், நடிகர் விக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஊனத்தை வென்று ஹீரோ அளவுக்கு வளர்ந்து சாதனை படைத்த குட்டியை விக்ரம், கட்டித் தழுவி பாராட்டினர்.

படத்தில் டான்ஸ் மற்றும் இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப் போகிறார்கள். ஆடிக் கலக்கப் போகிறார் குட்டி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil