»   »  சிம்பு நாயகிகள்...துரத்தும் தனுஷ்!

சிம்பு நாயகிகள்...துரத்தும் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் ஜோடி போட்ட நாயகிகளைத் துரத்தித் துரத்தி அவர்களுடன் ஜோடி போட ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மணிரத்தினமும், ஷங்கரும் ஒரு வித்தியாசமான ஹேபிட்டை வைத்திருந்தனர். அதாவது மணிரத்தினம் அறிமுகப்படுத்தும் நாயகிகளை தனது படங்களில் நடிக்க வைத்துக் கொண்டிருந்தார் ஷங்கர். மணீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா ராய் என இது தொடர்ந்தது.

இப்போது அதே பாணியில் அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளார் தனுஷ். சிம்புவுடன் ஜோடி போட்ட நடிகைகளைத் தேடித் தேடி தனது படங்களில் புக் பண்ணி வருகிறாராம் தனுஷ்.

சிம்புவுடன் பின்னிப் பிணைந்த காதலில் ஈடுபட்டு பின்னர் தோல்வியில் முடிந்து போன நயனதாரா, முதலில் யாரடி நீ மோகினியில் தனுஷுக்கு ஜோடியானார். இப்போது சிம்புவுடன் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான குத்து ரம்யாவும், தனுஷுடன் ஜோடி போட புக் ஆகியுள்ளார்.

பொல்லாதவன் படத்தில்தான் குத்து ரம்யா, தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகி குறித்து ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட குழப்பங்கள், குப்பாச்சுக்கள்.

முதலில் பூனம் பாஜ்வா நாயகியாக அறிவிக்கப்பட்டார். தெலுங்குத் திரையுலகை உலுக்கி வரும் குலுக்கல் நாயகிதான் பூனம். ஆனால் திடீரென பூனம் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் பாரதிராஜாவின் பொம்மாலட்டம் படத்தின் நாயகியான காஜல் அகர்வால் ஹீரோயினாக அறிவிக்கப்பட்டார்.

படப்பிடிப்பும் தொடங்கி விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கியது. இந்த நிலையில் காஜல் திடீரென நீக்கப்பட்டுள்ளாராம். அவருக்குப் பதில்தான் குத்து ரம்யா சேர்க்கப்பட்டுள்ளார் (இப்ப ரம்யா தனது பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டு விட்டாராம்)..

குத்து படத்தில் சிம்புவுடன் சேர்ந்து குதியாட்டம் போட்டவர்தான் ரம்யா அலைஸ் திவ்யா.

ஏன் இந்த மாற்றம், எதற்கிந்த குழப்பம் என்பதை பொல்லாதவன் யூனிட் விளக்கவில்லை. இப்போதைக்கு திவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் பொல்லாதவன் யூனிட் உறுதி செய்துள்ளது.

படம் முடிவதற்குள் வேறு எந்த பொல்லாப்பும் வராமல் பார்த்துக்கங்கய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil