»   »  முழு தசாவதாரத்தையும்தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு!

முழு தசாவதாரத்தையும்தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

கதைச் சுருக்கத்தைத் தரக் கூடாது, தசாவதாரம் படத்தின் முழுக் கதையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குநரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. அதை கமல்ஹாசன் திருடிக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறியிருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணைக்குப் பின்னர் தசாவதாரம் படத்தின் கதை கமல்ஹாசனுடையதுதான் என்று கூறி செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் செந்தில்குமார். இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், தசாவதாரம் படத்தின் கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்குமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து தசாவதாரம் பட தயாரிப்பாளர் சார்பில் படக் கதையின் ஆங்கில மொழி பெயர்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை நீதிபதிகள் பார்த்தனர். அப்போது இது கதைச் சுருக்கம் போலத் தெரிகிறது. 3 மணி நேரம் ஓடக் கூடிய படத்தின் கதை இவ்வளவுதானா என்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கேள்வி எழுப்பினார்.

பின்னர், படத்தின் முழுக் கதையையும் மொழிபெயர்த்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர், படத்தின் முழுக் கதையையும் மொழிபெயர்த்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைக்குள் தசாவதாரம் முழுக் கதையையும் தயாரிப்பாளர் தரப்பு கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil