For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜூனியர் ப்ரீத்தி வர்மா தீபா!

  By Staff
  |

  சமீபத்தில்தான் ப்ரீத்தி வர்மா கதை படு திரில்லாக நடந்து முடிந்தது. இப்போது அதே பாணியில் இன்னொரு கதைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது-துணை நடிகை தீபா ரூபத்தில்.

  சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தீபா(16). வசந்தம் வந்தாச்சு, வம்புச்சண்டை உள்ளிட்ட படங்களிலும், மலர்கள், கிரிஜா எம்ஏ போன்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார் தீபா.

  இப்போது அவர் சிறுகதை என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக சென்ற அவர் அப்படியே எஸ்கேப் ஆகி விட்டார். இதையடுத்து தீபாவின் தந்தை மகாகவி பாரதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  அதில், தன் மகளை துணை நடிகர்களை அரேன்ச் செய்யும் ஏஜெண்டான தனநாயகம் கடத்தி சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். மேலும், தீபா தனநாயகத்துடன் நீண்ட நாளாக பழகி வந்ததாகவும், பல இடங்களிலும் சுற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  தீபாவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  இதில், தனநாயகம் தீபாவை ஐயப்பன் தாங்கலில் உள்ள வீட்டில் வைத்திருந்ததும், போலீஸார் தீவிரமாக தேடியதைத் தொடர்ந்து அங்கிருந்து இருவரும் திருப்பூருக்கு சென்றும், பிறகு அங்கிருந்து ஹைதராபாத் போய் விட்டதும் தெரிய வந்தது.

  இருவரையும் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். இந்த நிலையில் தீபாவிடமிருந்து மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தை தீபாவே எழுதியுள்ளார்.

  அதில், நான் என் பெற்றோருக்கு வளர்ப்பு மகள். என்னுடைய உண்மையான அம்மா சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். குடும்பத்தின் வறுமை காரணமாக என்னை வளர்ப்பு தந்தை செல்வராஜூக்கு தத்து கொடுத்து விட்டார்.

  அவர்கள் என் மீது அன்பு காட்டவில்லை. வளர்ப்பு தாயான சரோஜா என்னிடம் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டார். படிக்க வேண்டிய வயதில் நடிக்க அழைத்து சென்றார்.

  நான் சினிமாவில் நடிக்க காரணமான தனநாயகம் என்னிடம் அன்பாக பழகினார். தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் அவர். அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது, இது நெருக்கமானது.

  இருவரும் பல இடங்ளுக்கு சேர்ந்து போனோம். எங்களது காதல் வீட்டுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து தனநாயகம் முறைப்படி பெண் கேட்டார். ஆனால் எனது பெற்றோர் தீபா பெரிய கதாநாயகி ஆனதும் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டனர்.

  ஆனால் அதன் பின்னர் சினிமாவில் வருவதைப் போல, எங்கள் காதலை பிரிக்க நினைத்தனர். அவருடன் நான் பேசினால் அடித்துத் துன்புறுத்துவார்கள். இதையடுத்து நான் தனநாயகத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்தேன். படப்பிடிப்புக்குப் போவதாக கூறி விட்டு வெளியேறி விட்டேன்.

  என்னை தனநாயகம் கடத்தவில்லை. நானாக விரும்பித்தான் அவருடன் வந்துள்ளேன்.

  என் பெற்றோர் டிவி மற்றும் சினிமாவில் நான் நடித்து தரும் பணத்திற்காகத்தான் என்னை தேடுகின்றனர். அவர்களுக்கு என் மீது உண்மையான அன்பு கிடையாது.

  நானும் அவரும் நேரம் வரும்போது காவல்நிலையத்திற்கு வருவோம். அதுவரை எங்களைத் தேட வேண்டாம் என அதில் தீபா எழுதியிருந்தார்.

  இதுகுறித்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கூறுகையில், என்னதான் தீபா விருப்பப்பட்டு தனநாயகத்துடன் சென்றிருந்தாலும் கூட அவருக்கு 16 வயதுதான் ஆகிறது. எனவே மைனர் பெண்ணைக் கடத்தியதாக தனநாயகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவரை கைது செய்வது நிச்சயம்.

  தனநாயகத்தின் நண்பர்களான பஞ்சு, இயேசு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

  இப்படித்தான் ப்ரீத்தி வர்மா ஷூட்டிங்கிலிருந்து ஓடிப் போய் பின்னர் திரும்பினார். அவரும் பெற்றோரைத்தான் குற்றம் சாட்டினார். அவரது பாணியில் இப்போது துணை நடிகை தீபாவும் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X