»   »  தேவா மகள் திருமண ரிஷப்ஷன்

தேவா மகள் திருமண ரிஷப்ஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, லதா ரஜினி காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடந்த இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பாலசந்தர், பார்த்திபன், ரவிக்குமார், கங்கை அமரன், நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்திக், நடிகைகள் மனோரமா, மும்தாஜ், விந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த்தின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

லஷ்மண் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ராவில் ஷாலினி உள்பட பல பின்னணி பாடகர்களின் இன்னிசை கச்சேரியும் நடந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil