»   »  ஐசக்-ஹேமமாலினி புது வழக்கு

ஐசக்-ஹேமமாலினி புது வழக்கு

Subscribe to Oneindia Tamil

ஐசக்கிற்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது 2வது மனைவியாக கூறப்படும் ஹேமமாலினி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கோழிப்பண்ணை அதிபர் ஐசக், நடிகை தேவிப்பிரியா கல்யாண அறிவிப்பைத் தொடர்ந்து அவரது முதல் மனைவி ஸ்டெல்லா போலீஸில் பரபரப்பு புகார் கொடுத்தார். அடுத்து 2வது மனைவி ஹேமமாலினி புகார் கொடுத்தார்.

தொடர்ந்து தேவிப்பிரியாவும், ஐசக்கும் தலைமறைவானார்கள். சமீபத்தில்தான் இருவரும் வெளியில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக கல்யாணம் செய்து கொள்வோம். ஹேமமாலினி சமரசத்திற்கு வருகிறார் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஹேமமாலினி புது மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் ஐசக்கின் முன்ஜாமீன் மனுவை விசாரித்தபோது, எனது குழந்தையின் பெயரில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி 4 வாரம் அவகாசம் கொடுத்தது. ஆனால் அதன்படி ஐசக் செய்யவில்லை.

எனவே ஐசக்குக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil