»   »  விரக்தியில் தேவிப்பிரியா

விரக்தியில் தேவிப்பிரியா

Subscribe to Oneindia Tamil

சிக்கன் பார்ட்டியிடம் சிக்கி, தலைமறைவாகி கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக அலைந்து ஓய்ந்துள்ள தேவிப்பிரியா கொஞ்ச நாளைக்கு டிவி தொடர்களில் நடிப்பதை விட்டு விடலாமா என்ற பலமான யோசனையில் உள்ளாராம்.

கோழிப்பண்ணை அதிபருடன் காதல் ஏற்பட்டு, அதனால் அவரது இரு மனைவிகளால் வழக்கு போடப்பட்டு தலைமறைவானார் தேவிப்பிரியா. சில கால தலைமறைவு வாழ்க்கையின்போது தேவிப்பிரியா குறித்த பல திகுடுமுகுடான மேட்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஒரு வழியாக முன்ஜாமீன் கிடைத்து சற்றே ஓய்ந்துள்ளார் தேவிப்பிரியா. இப்போது புது வகையான பிரச்சினை அவரை சுற்றிச் சூழ்ந்து சில்மிஷம் செய்ய ஆரம்பித்துள்ளதாம்.

பெரும்பாலான டிவி தொடர்களில் (குறிப்பாக சன் டிவியில் வரும் தொடர்களில்) அதிக அளவில் நடித்து வந்தவர் தேவிப்பிரியா. இப்ேபாதும் கூட முன்பு போலவே நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.

ஆனால் கதை சொல்ல வருகிறவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் தன்னைக் குறி வைப்பதாகவே இருப்பதாக உணர்கிறாராம் தேவிப்பிரியா. புருஷனால் கைவிடப்பட்ட கேரக்டர், குடும்ப வாழ்க்கையில் குட்டிச் சுவராகிப் போய் விட்ட பெண்களின் கதைகளாகவே தேவிப்பிரியாவிடம் சொல்கிறாரார்களாம்.

இது தற்செயலாக நடக்கிறதா அல்லது கோழி விவகாரத்திற்குப் பிறகு தன்னைக் குறி வைத்து இப்படிச் ெசால்கிறார்களா என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளாராம் தேவிப்பிரியா.

கதை சொல்ல வருகிறவர்களிடம் தனது பவரைக் காட்ட முடியாது என்பதால் கொஞ்ச நாளைக்கு தொடர்களில் நடிப்பதைத் தள்ளி வைத்து விட்டு ஹாயாக ஓய்வெடுக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் தேவிப்பிரியா.

இப்படித்தான் சில காலத்திற்கு முன்பு விபச்சார வழக்கில் சிக்கினார் புவனேஸ்வரி. அதற்கு முன்பு வரை நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால், கேஸில் சிக்கி வெளியே வந்த பின்னர் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைந்து அடியோடு ஓய்ந்து ேபாய் விட்டார் புவனேஸ்வரி.

அவரது கதி தேவிப்பிரியாவுக்கும் ஏற்படுமா அல்லது சிக்கல் சுனாமியிலிருந்து மீண்டு சிக்ெகன மறுபடியும் ஒரு ரவுண்டு அடிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil