»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்த படத் தயாரிப்பு எப்போ?இந்தக் கேள்வியைக் கேட்டால் தேவயானி சோகமாகி விடுகிறாராம். ஏனாம்?

தனது கணவர் ராஜகுமாரனை டைரக்டராகப் போட்டு இவர் எடுத்து முதல் படமான காதலுடன் தட்டுத்தடுமாறிவெளிவந்து சுமாராக ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தைத் தயாரிக்க வாங்கிய கடனைக் கட்டிமுடிக்கவே குறைந்தது பத்து படங்களிலாவதுநடித்தாக வேண்டும் தேவயானி. இதனால் வரும் படங்களுக்கு கதை, யார் ஹீரோ, எனக்கு என்னரோல் என்று கேள்விகள் ஏதும் கேட்காமல் அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்துவிட்டார்.

இந் நிலையில் அடுத்த படத்தை எப்படி ஆரம்பிப்பது என்று பதில் கேள்வி கேட்கிறார் தேவயானி.

காதலுடன் படம் வெளிவந்தால் ராஜகுமாரனுக்கு புதிதாக படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்தேவயானி. ஆனால், ஒரு படம் கூட வரவில்லை.

அவரோ அடிக்கடி ஆர்.பி. செளத்ரி அலுவலகத்திற்குப் போய் தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார். அடுத்த பட வாய்ப்பு ஏதாவது தர மாட்டாரா என்ற நம்பிக்கையுடன். செளத்ரிஅசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை.

உற்சாகத்தில்"ஊ" நடிகை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil