»   »  மீண்டும் சங்கீதம், சந்தோஷம் ..

மீண்டும் சங்கீதம், சந்தோஷம் ..

Subscribe to Oneindia Tamil

நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற இளமைப் பாடலான எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் என்ற பாடலை தனுஷ், பூனம் பஜ்வா நடிக்கும் பொல்லாதவன் படத்துக்காக மீண்டும் பாடியுள்ளாராம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பாடல்கள் என்று பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக இடம் பெறக் கூடிய பாடல் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இன்னிசையில், எஸ்.பி.பியின் தேன் குரலில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒலித்த அந்தப் பாடல் இன்றளவும் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடிய ரம்யமான பாடலாக இருக்கிறது.

பாடல் வரிகளும், எஸ்.பி.பியின் குரலும், பாட்டுக்கு நடித்த ரஜினி, கமல், ஜெயப்பிரதா ஆகியோரின் அருமையான நடிப்பும் பாடலுக்கு உயிர் கொடுத்தன.

படமும், பாடலும் வந்து 30 ஆண்டுகள் போன பின்னரும் கூட இன்னும் காதுகளில் இந்தப் பாடல் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. கமல் கூட சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினி, ஜெயப்பிரதாவை சந்தித்தபோது நினைத்தாலே இனிக்கும் காலத்திற்குப் போவதைப் போல உணர்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அப்படிப்பட்ட அருமையான அந்தப் பாடல் மீண்டும் நம் காதுகளை குளிர்விக்க வருகிறது. தனுஷ் நடித்து வரும் பொல்லாதவன் படத்தில் இப்பாடலி ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில், ரீமிக்ஸ் ஆகியுள்ள இப்பாடலை அதே எஸ்.பி.பி.தான் பாடியுள்ளார்.

பாடல் பதிவின்போது நெகிழ்ந்து போய் மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டாராம் எஸ்.பி.பி. அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து பாடலை பதிவு செய்தார்களாம். பாடல் பதிவு முடிந்த பின்னர் எஸ்.பி.பி.யின் குரல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்ததைப் பார்த்து அனைவரும் உணர்ச்சிவசப்பட்டி கைதட்டி எஸ்.பி.பி.யைப் பாராட்டினார்களாம்.

படம் மட்டுமல்ல, எஸ்.பி.பியின் குரலும் கூட நினைத்தாலே இனிக்கக் கூடியதுதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil