»   »  ஹேப்பி பர்த்டே தனுஷ்: 33வது பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு குவியும் வாழ்த்து

ஹேப்பி பர்த்டே தனுஷ்: 33வது பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு குவியும் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வண்ணம் உள்ளனர். அவர்களுடன் இணைந்து திரை பிரபலங்களும் தனுஷை வாழ்த்தி வருகிறார்கள்.

தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தனுஷ் நடித்த படங்களைப் பற்றிய சிறப்பான காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ் இன்று கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் வரை சென்று இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபாஸ் வாழ்த்து

மல்டி டேலண்டட் தனுசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பாகுபலி நடிகர் பிரபாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிறந்தநாள் மாஸ் அப்

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தனுஷ் நடித்த பிரபல காட்சிகளை ஒருங்கிணைந்து மாஸ் அப் போட்டு யுடுயூப்பில் பதிவிட்டுள்ளனர்.

பிரபலமான தனுஷ்

பிரபலமான தனுஷ்

அண்ணன் செல்வராகவன், தனுஷ் வெளியான காதல் கொண்டேன் படம் தனுஷை அடையாளப்படுத்தியது. அதைத் தொடர்ந்து வெளியான 'திருடா திருடி'
மாஸ் ஹிட் ஆனது. 'மன்மதராசா.. பாடல் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பானது.

'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி' ஆகிய மூன்று படங்கள் மூலம் முன்னணி நடிகராக வலம் வர ஆரம்பித்தார். பொல்லாதவன்', 'ஆடுகளம்' போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார்.

பாலிவுட் அறிமுகம்

பாலிவுட் அறிமுகம்

கொலை வெறி மூலம் இவர் அடைந்த உச்சம், பிரமிக்கத்தக்கது. தொடர்ந்து இந்தியில் அனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ராஞ்ஹனா' என்னும் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டிலும் தடம் பதித்தார். நடிகராக அறிமுகமாகி, பின்பு பாடலாசிரியர் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

33வது பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

English summary
Dhanush celebrates 33 birthday today. Dhanush real name Venkatesh Prabhu Kasthuri Raja, was born on July 28, 1983. His father, Kasthuri Raja, is a well-known director and producer in Tamil industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil