Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தனுஷ் பர்த் டே ஸ்பெஷல்... இதெல்லாம் இத்தனை நாள் தெரியாம போச்சே
சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தற்போது ஹாலிவுட், டோலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார் தனுஷ். தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கிறார்கள்.
திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் என வரிசையாக தனுஷ் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. இந்த சமயத்தில் தனுஷ் பற்றி பலரும் அரியாத விஷயங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
குடும்பத்துடன்
விசேஷத்தில்
கலந்துகொண்ட
தனுஷ்..
அட
மகன்களும்
இருக்காங்களே!

தவறிப் போய் நடிகரான தனுஷ்
நடிகராக வேண்டும் என தனுஷ் ஒரு போதும் நினைத்தது இல்லை. தனுஷின் முதல் ஆசை ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து, செஃப் ஆக வேண்டும் என்பது தான் தனுஷின் ஆசை. ஆனால் தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 2002 ம் ஆண்டு, தனது 16வது வயதில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துள்ளார். முதல் படமே ஹிட்டாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்ததால் தனுஷிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் அதிகரித்தது.

தனுஷ் பெயருக்கு இது தான் காரணம்
தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 1995 ம் ஆண்டு கமல் நடித்த குருதிப்புனுல் படத்தை பார்த்து விட்டு, அதன் மீதான மோகம் காரணமாக தனது பெயரை தனுஷ் என மாற்றி வைத்துக் கொண்டார். குருதிப்புனல் படத்தில் நக்சலைட்டுகளை அழிப்பதற்காக கமல் மேற்கொள்ளும் ஆபரேஷனுக்கு பெயர் தனுஷ். இந்த பெயர் தனுஷிற்கு தனி அடையாளமாக விளங்கியது.

படம் பார்க்க போய் காதலில் விழுந்த தனுஷ்
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் ரஜினிக்காக ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் போது தான் தனுஷ், ஐஸ்வர்யாவை சந்தித்துள்ளார். இந்த படத்தில் தனுஷின் நடிப்பு ஐஸ்வர்யாவிற்கு மிகவும் பிடித்து போய் விட்டது. பிறகு பொக்கே அனுப்பி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

சாதனை படைத்த கொலவெறி பாடல்
தனுஷின்
3
படத்தில்
இடம்பெற்ற
கொலவெறி
பாடல்
சாதனை
படைத்து
மிகப்
பெரிய
பெயரை
தனுஷிற்கு
பெற்று
தந்தது.
உலகம்
முழுவதும்
பிரபலமான
இந்த
பாடல்
யூட்யூப்பில்
அதிக
பார்வைகளை
பெற்ற
பாடலாக
உள்ளது.
இந்த
பாடலுக்கு
வெறும்
6
நிமிடத்தில்
பாட்டெழுதினார்
தனுஷ்.
இந்த
பாடலை
மொத்தமாக
25
நிமிடங்களில்
பாடி
முடித்துள்ளார்
தனுஷ்.

ஆன்மிகவாதி தனுஷ்
தனுஷ் மிகப் பெரிய சிவ பக்தர். இதனால் அவர் சுத்தம் சைவம். இதனால் அவரது மகன்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என பெயர் வைத்துள்ளார். அடிக்கடி சிவன் கோயிலுக்கு செல்வது தனுஷிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவன் கோயிலுக்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளார் தனுஷ்.