»   »  திருவிளையாடல் வழக்கு பைசல்

திருவிளையாடல் வழக்கு பைசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தங்ளது வங்கி குறித்து இடம் பெற்ற வசனத்தை எதிர்த்து பாங்க் ஆப் பரோடா வங்கி தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், தனுஷ் நடித்துள்ள திருவிளையாடல் ஆரம்பம் படத்தில், தங்களது வங்கியை அவமதிக்கும் வகையில் வசனம் உள்ளது. எனவே அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக படத் தயாரிப்பாளரும், தனுஷின் தந்தையுமான இயக்குநர் கஸ்தூரி ராஜா தாக்கல் செய்த பதில் மனுவில், படத்தின் டைட்டிலில் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே, யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்ற வாசகத்தை இடம் பெறச் செய்வதாக கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராமசுப்ரமணியம், இத்தோடு வழக்கை பைசல் செய்வதாக கூறி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil