»   »  மேடையில் இளையராஜாவின் லைவ் ஷோவுடன் டோணி இசை வெளியீடு!

மேடையில் இளையராஜாவின் லைவ் ஷோவுடன் டோணி இசை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரகாஷ் ராஜ் இயக்கி வரும் டோணி படத்தின் இசை வெளியீடு வரும் ஜனவரி 28-ம் தேதி நடக்கிறது.

இந்த விழாவின் சிறப்பே இசைஞானி இளையராஜாதான். படத்தின் பாடல்களை தனது இசைக் குழுவினருடன் மேடையிலேயே இசைத்து வெளியிடப் போகிறார் என்பது, இசைஞானியின் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் தனது பழைய ஸ்டைலில் இளையராஜா இசையமைத்துள்ள படம் இது. பழைய ஸ்டைல் என்றால், முன்பு போல அனைத்து இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களை ஒரே இடத்தில் வைத்து பாடல் பதிவு செய்வது. இடையில் கொஞ்ச காலம் தனித்தனியாக பதிவு செய்து வந்த ராஜா, டோணியிலிருந்து பழைய ஸ்டைலுக்கு மாறிவிட்டார்.

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் டோணியில் பிரகாஷ்ராஜும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேவி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத்தின் மகன் ஆகாஷ் பூரி இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் மகனாக நடித்துள்ளார். ராதிகா ஆப்தே பிரகாஷ் ராஜ் மனைவியாக நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மகேந்திர சிங் டோணி இதில் ஒரு காட்சியில் தோன்றுகிறார். பிரபு தேவா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

English summary
The audio launch of Dhoni will take place on January 28th. For the first time, maestro Ilayaraja will conduct a live orchestra at the audio launch and it is going to be a musical treat for all his fans out there.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil