எல்லோருக்கும் அஜித்தை பிடிக்கும்...அஜித்திற்கு என்ன பிடிக்கும்...இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் பலருக்கும் ஃபேவரைட்டான நடிகர் அஜித். இவரை பாராட்டி, புகழாதவர் தமிழ் திரையுலகில் கிடையாது. அஜித்தின் தனிப்பட்ட பல நல்ல குணங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, அவரை பின்பற்றுபவர்கள் பலர்.

எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து, உச்சம் தொட்டு, மக்களின் மனங்களை வென்றவர்களில் அஜித்தும் ஒருவர். தனக்கென தனிக் கொள்கை வைத்து, தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழ்பவர் அஜித். பெரிய நடிகராக இருந்தாலும், மற்ற சமயங்களில் தானும் அனைவரையும் போல சாதாரண மனிதர் என்பதை பலமுறை நிரூபித்த அனைவரையும் பிரம்மிக்க வைக்க கூடியவர்.

இன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அஜித்திடம் தங்களுக்கு பிடித்த குணங்கள், அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் பிடித்த அஜித்திற்கு என்னவெல்லாம் பிடிக்கும், யாரையெல்லாம் பிடிக்கும் என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அஜித் பற்றி இதெல்லாம் தெரியுமா

அஜித் பற்றி இதெல்லாம் தெரியுமா

அஜித்தின் பிறந்த ஊர் - செகந்திராபாத் , தெலுங்கானா

பள்ளி படிப்பு - சென்னை ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூல்

முதல் படம் - என் வீடு என் கணவர்

பாலிவுட் படம் - அசோகா

பொழுதுபோக்கு - ரேசிங், போட்டோகிராபி, கிரிக்கெட் விளையாடுவது, அறிஞர்களின் பயோகிரபிக்கள் படிப்பது

பிடித்த கலர் - பிளாக்

பிடித்த விளையாட்டு - ஃபுட்பால், கிரிக்கெட், பைக் ரேஸ்

 விருந்து கொடுக்கு அஜித்

விருந்து கொடுக்கு அஜித்

இது தவிர அஜித்திற்கு யூட்யூப்பில் சமையல் தொடர்பான வீடியோக்கள் பார்க்க மிகவும் பிடிக்குமாம். அவர் மெக்சின் சமையல் அயிட்டங்கள் செய்வதில் தனிதிறமை வாய்ந்தவராம். தான் நடிக்கும் படங்களின் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாளாவது தன்னுடன் நடிப்பவர்களுக்கு அசைவ பிரியாணி, சிக்கன் செய்து விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம் அஜித்.

அஜித் என்ன சாப்பிடுவார்

அஜித் என்ன சாப்பிடுவார்

ஆனால் அஜித் பெரும்பாலும் சாப்பிடுவது வேகவைத்த காய்கறிகள். சரியான டைமிற்கு சாப்பிடுவதை அவர் தவறாமல் கடைபிடித்து வருகிறாராம். சாப்பாடு தவிர சூப்பர், பிளாக் டீ மட்டும் அஜித் குடிப்பாராம். சாஃப்ட் டிரிங்க்ஸ், கூல் ட்ரிங்ஸ் போன்றவற்றை அவர் ஒரு போதும் தொடவே மாட்டாராம்.

வித்தியாசமான மனிதர்

வித்தியாசமான மனிதர்

அஜித், ஒரு வீடியோ லைப்ரரியே வைத்துள்ளாராம். அதில் அவரின் மகன் மற்றும் மகள் பிறந்தது முதல் நடந்த ஒவ்வொரு முக்கியமான தருணங்களையும் வீடியோவாக எடுத்து சேமித்து வைத்து வருகிறாராம். வருங்காலத்தில் அவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் தவறாமல் வீடியோ எடுத்து, அவற்றை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறாராம்.

இப்படி ஒரு பழக்கமா

இப்படி ஒரு பழக்கமா

ஆரம்பத்தில் ஃபார்முலா 2 கார் ரேசில் பங்கேற்ற போது விதவிதமான கார்கள், பிறகு பைக்குகள் என வாங்கி குவித்த அஜித், சமீப ஆண்டுகளாக போட்டோகிராபி மீதான காதல் காரணமாக லேட்டஸ்ட் கேமிராக்கள் அத்தனையும் வாங்கி வைத்துள்ளாராம். இதனை அஜித்தின் மனைவி ஷாலினியே ஒரு முறை பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இந்த கேமிராக்களால் இதுவரை ஷாமிலி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அப்பு குட்டி போன்றவர்களை அஜித் போட்டோஷுட் நடத்தி உள்ளார்.

இப்படி ஒரு நடிகரா

இப்படி ஒரு நடிகரா

தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாசலுக்கே சென்று வரவேற்று, அவர்களுக்காக தானே சமைத்து, தானே பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளாராம் அஜித். அஜித் எந்த வெளியூர் சென்றாலும் வித்தியாச வித்தியாசமான உணவகங்களுக்கு சென்று, அங்குள்ள ஸ்பெஷலான உணவுகளை ருசி பார்ப்பதில் அவருக்கு அப்படி ஒரு பிரியமாம். அது மட்டுமல்ல அவற்றில் ஏதாவது ஒரு அயிட்டம் அஜித்திற்கு பிடித்து விட்டது என்றால் உடனடியாக அதை சமைத்த சமையல்காரரை அழைத்து மனம் திறந்து பாராட்டி விடுவாராம்.

விளம்பரம் தேடாத மனிதர்

விளம்பரம் தேடாத மனிதர்

வீரம் படத்தின் ஷுட்டிங்கின் போது, ஷுட்டிங் நடந்த இடத்திற்கு அருகே சலவை தொழிலாளி ஒருவர் தனது மகளின் மருத்துவ செலவிற்காக உதவி கேட்டுக் கொண்டிருந்தாராம். இதை கவனித்த படக்குழுவினர், அனைவரிடமும் பணம் சேகரித்து அந்த நபரிடம் வழங்கினார்களாம். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பெண்ணின் மருத்துவ செலவிற்கு தேவையான அத்தனை பணத்தையும் அஜித்தே கொடுத்திருந்தாராம். இந்த விஷயம் அந்த சலவை தொழிலாளிக்கே பிறகு தான் தெரியுமாம். தான் செய்யும் உதவிகளை விளம்பரப்படுத்திக் கொள்வதை அஜித் ஒரு போதும் விரும்பாததால் அவரை அனைவரும் உண்மையான ஜென்டில்மேன் என கொண்டாடுகிறார்கள்.

இவர பார்த்து கத்துக்கனும்

இவர பார்த்து கத்துக்கனும்

படத்திற்காக தனக்கு வழங்கப்படும் சம்பளத்தை செக்காக மட்டுமே அஜித் வாங்குவாராம். அதற்கு முறையாக வரி கட்டி, வங்கி மூலமாக தான் பெற்றுக் கொள்வாராம். அதே போல் தான் நடிக்க போகும் படங்களின் தயாரிப்பாளர்களிடம், தற்போது நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் உங்களின் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடக் கூடாது என கண்டிப்பாக சொல்லி விடுவாராம்.

 பாசமான கணவர்

பாசமான கணவர்

வித்தியாசமான ஹெல்மெட்கள், அரிதான காயின்கள், ஸ்டாம்ப்கள் சேகரிப்பது அஜித்திற்கு மிகவும் பிடிக்குமாம். இதே போல் வீடு முழுவதும் புத்தகங்களாக வாங்கி அடுக்கி வைத்து விடுவாராம். Living with the Himalayan Masters புத்தகம் அஜித்திற்கு மிகவும் பிடித்ததாம். இதை ரஜினிக்கும் கூட அவர் பரிசளித்துள்ளார். அதே சமயம் அஜித்திற்கு நகைகள் மீது பெரிதாக நாட்டம் கிடையாதாம். தங்கம், பிளாட்டினம் போன்ற நகைகள் அணிவதை தவிர்ப்பாராம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விரலில் ஒரு மோதிரத்தை மட்டும் கழற்றாமல் போட்டிருக்கிறார். அது அவரது மனைவி ஷாலினி பரிசளித்த மோதிரமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X