முதல் நாளே கமல் சார் அப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல... கௌதம் மேனன் ஃபிளாஷ் பேக்
சென்னை: இயக்குநர் கௌதம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் இயக்குநர் கௌதம் படங்களில் இருக்கும் ஐந்து வெவ்வேறு காட்சிகள் பற்றி கூறியிருக்கிறார்.

மின்னலே
மின்னலே திரைப்படத்தில் மாதவன் மற்றும் அப்பாஸ் சவால் விடும் காட்சி ஒளிபரப்பான போது, அந்தக் காட்சியில் இடம் பெற்ற பின்னணி இசை மாதவன் மற்றும் அப்பாஸ் இருவருக்குமே வரும்படிதான் நான் கதையில் எழுதி இருந்தேன். அப்படித்தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடமும் கேட்டிருந்தேன். ஆனால் மேடி மேடி என்கிற பின்னணி இசையை அவர் கொடுத்திருந்தார். அப்போது எங்களுக்குள் இனிமையான ஒரு விவாதம் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் தான் அந்தக் காட்சியை மாதவன் மீது செலுத்தி கொண்டு செல்லலாம் என்று அறிவுறுத்தினார்.

வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம் திரைப்படத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் தெரியும் இயக்குநர் கௌதமனின் தந்தை மறைவிற்கு பிறகுதான் அவருடைய ஞாபகத்தில் அந்தப் படத்தை அவர் எடுத்தார். தன்னுடைய நினைவுகள் அழிந்து விடக்கூடாது அதனை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாரணம் ஆயிரம் கதையை எழுதி இருந்தாராம். முதலில் மோகன்லால் அல்லது நானா பட்டேக்கர்தான் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் தனது அப்பாவை நன்கு அறிந்த சூர்யா, தானே அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்.

வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் அறிமுகக் காட்சியை போட்டு காண்பித்தபோது, என் தலைவன் என்று தொடங்கிய கௌதம், அந்தக் காட்சிதான் நடிகர் கமல் ஹாசனை வைத்து தான் முதன் முதலில் படம் பிடித்த நாள் என்றும் அவரை வைத்து நான் முதலில் எடுத்த ஷாட் கதவை திறந்து கொண்டு வருவது என்றும் தன் வாழ்க்கையில் கமல்ஹாசன் கதவை திறந்து கொண்டு வர வேண்டும் என்பதைத்தான் குறியீடாக வைத்து அந்த ஷாட்டை எடுத்தேன் என்றும் கௌதம் கூறினார். மேலும், தான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு விஷயம் கமல் சார் செய்வார் என்று தெரியும். அதனால் முதல் நாளும் அந்த எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது.

ஸூம் லென்ஸ்
வழக்கமாக என்னுடைய படங்களில் நான் ஸூம் லென்ஸ் பயன்படுத்த மாட்டேன். அன்று,"என் கண்ண கேட்டியா..?" என்கிற வசனம் பேசும் காட்சி எடுப்பதற்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஸூம் லென்ஸை போட்டிருந்தார். சரியாக அந்த வசனம் பேசும்பொழுது கமல் சார் திடீரென்று தனது கண்களை விரித்து பேசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நான் ரவி வர்மனிடம்,"ரவி புடி புடி..." என்று சொல்ல ரவி வர்மனும் உடனே அவர் கண்களுக்கு ஸூம் வைத்து அந்த ஷாட்டை படமாக்கினார். அந்த மொத்தகாட்சியும் திட்டமிடாமல் எதார்த்தமாக நடந்தது. கமல் அப்படி செய்வார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை என்று தன் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் கௌதம்.


Click it and Unblock the Notifications











