twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷை செதுக்கிய செல்வராகவன்...வித்தியாச இயக்குநருக்கு இன்று பிறந்தநாள்

    |

    தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர் இன்று அவரது 45 வது பிறந்தநாள். பல முன்னனி நடிகர்கள், இசையமைப்பாளர்களை தூக்கிவிட்ட பெருமை செல்வராகவனுக்கு உண்டு. தனுஷை தனுஷுக்கு அடையாளம் காட்டிய பெருமை அண்ணன் செல்வராகவனுக்கு உண்டு.

    நடிகர் நாசர் பற்றிய சுவாரஸ்யங்கள்...அட இதெல்லாம் தெரியாம போச்சே நடிகர் நாசர் பற்றிய சுவாரஸ்யங்கள்...அட இதெல்லாம் தெரியாம போச்சே

    திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்கள்

    திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்கள்

    தமிழ் திரையுலகில் அரிதாக சில இயக்குனர்கள் வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். வழக்கமான கதைகள் சென்று கொண்டிருந்த நேரத்தில் நாடகபாணி கதைகளை, மத்தியதர மக்களின் வாழ்க்கையை குறிக்கும் கதைகளை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பாலச்சந்தர். ஸ்டுடியோக்களில் மட்டுமே இருந்த திரைப்படங்களை அழகிய கிராமங்களுக்கு கொண்டு சென்று இயல்பாக படம் எடுத்தவர் பாரதிராஜா.

    ஜாம்பவான்கள்

    ஜாம்பவான்கள்

    வெளிப்புறப் படப்பிடிப்பில் கண்ணுக்கினிய காட்சிகளை அழகாக கேமராவில் படம் எடுத்து இயல்பாக காட்டியவர் பாலுமகேந்திரா. இந்தியாவில் வெகு யதார்த்தமாக படத்தை எடுத்து பிரமிக்க வைத்தவர் மணிரத்தினம். பிரம்மாண்ட படங்களை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் சங்கர். இது போல் பல வித்தியாசமான இயக்குனர்கள் பல்வேறு காலகட்டங்களில் வந்துள்ளனர்.

    முன்னணி இளம் இயக்குநர்களில் முதல்வர்

    முன்னணி இளம் இயக்குநர்களில் முதல்வர்

    வழக்கமான பாணியில் இருந்து விலகி கதையை சொல்லும் இயக்குனர்கள் எப்போதும் மக்கள் மனதை, ரசிகர்கள் மனதை கவர்ந்து முன்னணி இயக்குனர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர், அவர்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களின் ஆதரவு இருந்து வந்துள்ளது, கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், ரஞ்சித், ஞானவேல், கார்த்திக் சுப்புராஜ், மாரிசெல்வராஜ், லோகேஷ் கனகராஜ், வினோத்குமார் என பல இயக்குனர்கள் தற்போது மக்களிடம் செல்வாக்குப் பெற்று முன்னணியில் உள்ளனர்.

    புதுப்பேட்டை பேசப்பட்ட படம்

    புதுப்பேட்டை பேசப்பட்ட படம்

    ஆனால் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற வித்தியாசமான படத்தை வெற்றிமாறனுக்கு முன்பே புதுப்பேட்டை எனும் ஒரு இயல்பான படத்தை தனுஷை வைத்து கொடுத்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் இயக்குனர் செல்வராகவன். அவரது பிறந்த நாள் இன்று. நடிகர் தனுஷின் சகோதரர் செல்வராகவன் தனுஷை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமையும் செல்வராகவனுக்கு உண்டு.

    தனுஷை அறிமுகப்படுத்திய அண்ணன்

    தனுஷை அறிமுகப்படுத்திய அண்ணன்

    அவரது முதல் படத்தில் தனுஷை அறிமுகப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பள்ளிப் பருவ காதலை மையமாக வைத்து துள்ளுவதோ இளமை என்கிற படம் நெகட்டிவாக விமர்சிக்கப்பட்டாலும் தனுஷை திரும்பி பார்க்க வைக்கப்பட்டது. அதன்பின்னர் காதல் கொண்டேன் என்கிற படம் தனுஷுக்கு ஓரளவு தமிழ் மக்கள் மத்தியில் பெயரை வாங்கி கொடுத்தது. அதன்பின்னர் 7 ஜி ரெயின்போ காலனி என்கிற படத்தை எடுத்தார். வித்தியாசமான காதல் கதை படம் வெற்றிப்பெற காரணமாக அமைந்தது.

    செல்வராகவன் யுவன் கெமிஸ்ட்ரி

    செல்வராகவன் யுவன் கெமிஸ்ட்ரி

    இந்தப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் வித்தியாசமான பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இன்றும் அந்த பாடல்கள் யுவன்சங்கர் ராஜாவின் இசை தொகுப்பில் முக்கிய பாடலாக உள்ளது. யுவன்சங்கர் ராஜாவுக்கும் செல்வராகவனுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி உண்டு. யுவன்சங்கர் ராஜா செல்வராகவனுக்காக இசையமைத்த பாடல்கள் அனைத்துமே அருமை எனலாம். அதுவரை சாதாரண காதல் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த தனுஷால் வேறு பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிருபித்த படம் புதுப்பேட்டை.

    தனுஷை தனுஷுக்கு அடையாளம் காட்டிய செல்வராகவன்

    தனுஷை தனுஷுக்கு அடையாளம் காட்டிய செல்வராகவன்

    இந்த படத்தில் தனுஷின் வித்தியாசமான நடிப்பு மிக சிறப்பான ஒரு இடத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. பின் வரும் காலங்களில் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து பேர் பெற்ற பல படங்களில் நடிக்கும் நம்பிக்கையை இப்படம் பெற்றுக்கொடுத்தது எனலாம். அந்த வகையில் ஒரு இயக்குநராக தனுஷுக்குள் இருந்த வெறித்தனமான ஒரு நடிகரை வெளியில் கொண்டுவந்தது அண்ணன் செல்வராகவனையே சேரும்.

    புதுப்பேட்டை படத்தை பின்பற்றிய வெற்றிமாறன்

    புதுப்பேட்டை படத்தை பின்பற்றிய வெற்றிமாறன்

    புதுப்பேட்டை படத்தை பின்பற்றி வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய படங்கள் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இருவருக்கும் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அடித்தளத்தை உருவாக்கியவர் செல்வராகவன் எனலாம். தொடர்ந்து தனுஷை வைத்து யாரடி நீ மோகினி படத்தை கொடுத்தார் செல்வராகவன் அதன்பின்னர் கார்த்தி, ஆர்.பார்த்திபனை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்தார். வரலாற்றுக் காலத்தை சித்தரிக்கும் படம் இது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறந்த படத்தை நடித்ததாக உணர்ந்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தார் அதேப்போன்று ஆர்.பார்த்திபன் தனது பேட்டியில் பல படங்கள் நடித்திருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் பெரிய மன நிறைவைத் தந்தது என்பதுபோல் தெரிவித்திருந்தார்.

     பலரை உருவாக்கிய செல்வராகவன்

    பலரை உருவாக்கிய செல்வராகவன்

    செல்வராகவனும் தனது திரைப்பயணத்தில் பல பல பேரை உருவாக்கியுள்ளார் அல்லது செதுக்கி உள்ளார். நடிகர் தனுஷ் என்கிற சிறந்த நடிகரை தமிழ் திரையுலகத்திற்கு தந்ததில் செல்வராகவனுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. அதேபோன்று யுவன் ஷங்கர் ராஜாவை தனது படங்களில் பயன்படுத்தி, அவரும் அவர் மூலம் பல நல்ல பாடல்களை கொடுத்ததன் மூலம் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஒரு சிறந்த பாதையை வகுத்துக் கொடுத்தார் என்று சொல்லலாம். அதே போன்று நடிகர் கார்த்திக்கு ஆயிரம்விளக்கு, ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் ஒரு சிறந்த நடிகருக்கான இடத்தை பெற்றுக் கொடுத்தவர் செல்வராகவன்.

    சூர்யாவை வைத்து எடுத்த என்ஜிகே

    சூர்யாவை வைத்து எடுத்த என்ஜிகே

    வித்தியாசமான படங்களை எடுத்த செல்வராகவன் சயின்ஸ் பிக்ஷன் படம் போன்று இரண்டாம் உலகம் என்ற ஒரு வித்தியாசமான கதை களத்தை கொண்ட படத்தை எடுத்தார் ஆனால் அது அவ்வளவாக ஓடவில்லை. அதே போன்று நடிகர் சூர்யாவை வைத்து என்ஜிகே என்று அவர் எடுத்த படம் அப்போதைய சூழலில் சரியாக போகாவிட்டாலும் இந்த காலகட்டத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் போன்ற படங்கள் சிறப்பாக ஓடும் காலகட்டத்தில் அதுபோன்ற படம் வந்திருந்தால் பெரும் வெற்றி பெற்றிருக்கும்.

    அமைதியான குடும்ப வாழ்க்கை

    அமைதியான குடும்ப வாழ்க்கை

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் செல்வராகவன் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்று அவருடைய 45 வது பிறந்தநாள். முதல் திருமணம் நடிகை சோனியா அகர்வாலுடன் நடந்த நிலையில் பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பின்னர் தன்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை செல்வராகவன் மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    English summary
    Dhanush’s Brother Selvaraghavan Birthday Today: தனுஷின் நடிப்புத்திறமையை தனுஷுக்கே உணரவைத்தவர் இயக்குநர் செல்வராகவன் அவரது பிறந்தநாள் இன்று. வித்தியாச இயக்குநர் என பெயரெடுத்தவர் செல்வராகவன்.தனுஷை செதுக்கிய செல்வராகவன்...வித்தியாச இயக்குநருக்கு இன்று பிறந்தநாள்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X