»   »  டைரக்டர் முமைத் கான்!

டைரக்டர் முமைத் கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mumaith Khan
துண்டு துக்கடா துணியோடு இதுவரை கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட ஆட்டம் போட்ட முமைத் கான் அடுத்து, தொப்பி அணிந்து கொண்டு டைரக்ட் பண்ணப் போகிறாராம்.

மும்பையிலிருந்து வந்த புயல் என்றாலும் கூட திருச்சி பக்கம்தான் முமைத் கானுக்கு சொந்த ஊராம். இதனால் பக்காவாக தமிழ் பேசும் களேபர கிளாமர் சுந்தரி முமைத்கான் தமிழிலும், தெலுங்கிலும் தித்திக்கும் குத்துப் பாட்டுக்களுக்கு ஆட்டம் போட்டு வருகிறார்.

அதிலும் தமிழை விட தெலுங்கில்தான் முமைத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கு ஆட்டத்தோடு நடிப்பையும் காட்டி அசத்தி வருகிறார் முமைத். சமீபத்தில் வெளியான டாக்டர் ராஜசேகரின் உடம்பு எப்படி இருக்கு படத்தில் சின்னதாக ஒரு கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் முமைத்.

இந்த நிலையில், சமீபத்தில் ஹீரோயினாகவும் உயர்ந்தார் முமைத் - தமிழில் அல்ல தெலுங்கில். அவர் அதிரடி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ள மைசம்மா ஐபிஎஸ் படம் கடந்த வாரம் வெளியாகியது. படம் முழுக்க அதிரடியில் பின்னி எடுத்துள்ளார் முமைத்கான்.

இந்தப் படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடப் போகிறார்களாம். இதனால் முமைத் சந்தோஷமாக உள்ளார்.

குத்து நாயகி, கேரக்டர் நடிகை, ஹீரோயின் என உயர்ந்து வந்துள்ள முமைத் மனதில் ஒரு புது ஆசை புத்தாடை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. அது இயக்குநராகி விட வேண்டும் என்பதுதான்.

அதற்கு முன்பாக தமிழிலும் நாயகியாக நடித்து விட வேண்டும் என்று விரும்புகிறாராம் முமைத்கான். இதற்காக சில இயக்குநர்களை நேரில் போய் சந்தித்து தனது திறமைகளை சொல்லி, எனக்கேற்றார்போல கதை செய்து என்னை வைத்துப் படம் இயக்குங்களேன் என்று கோரி வருகிறாராம்.

அத்தோடு இன்னொரு கோரிக்கையையும் கூட அவர் வைத்து வருகிறாராம். அதாவது தமிழிலும், தெலுங்கிலும் வெளியாவது போல படம் இயக்கும் ஆசையில் உள்ளேன். அதற்கும் உதவ வேண்டும் என்று அன்போடு கோரிக்கை வைக்கிறாராம்.

இவர்களில் மசாலா மிக்ஸ் இயக்குநர் என்று புகழ் பெற்ற ஏ.வெங்கடேஷ், முமைத்துக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளாராம்.

இந்த சந்தோஷ சமாச்சாரம் குறித்து முமைத்திடம் கேட்டபோது, ஆமாம், வணிக ரீதியிலான படத்தை இயக்க தயாராகி வருகிறேன். அடுத்த வருடம் இது கை கூடும். இதுதான் படத்தை இயக்க சரியான நேரமாக கருதுகிறேன். எனக்குக் கிடைத்துள்ள அனுபவத்தை வைத்து டைரக்டராகும் நம்பிக்கை வந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் உள்ள நண்பர்கள் சிலரும் எனது இயக்குநர் ஆசைக்கு ஆதரவாக உள்ளனர். உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர், ஊக்கமூட்டியுள்ளனர்.

நல்ல ஆதரவு கிடைத்தால் படம் தயாரிக்கக் கூட நான் ரெடிதான் என்கிறார் முமைத் தள தளப்பான சிரிப்புடன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil