நடிகர் முதல் பாடலாசிரியர் வரை...விக்னேஷ் சிவன் பிறந்தநாள் ஸ்பெஷல்

சென்னை : டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் விக்னேஷ் சிவன். நான்கு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையலக பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் சோஷியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக பயணம்

திரையுலக பயணம்

ஆரம்பத்தில் குறும்படங்கள் இயக்கி வந்த விக்னேஷ் சிவன், சிவி என்ற படத்தில் மிகச் சிறிய ரோலில் நடித்து தனது திரையுலக பயணத்தை துவக்கினார். இதைத் தொடர்ந்து 2012 ல் போடா போடி படத்தை தானே எழுதி, இயக்கி, டைரக்டராக அறிமுகமானார். இந்த படத்தில் விக்னேஷ் சிவனாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

நயன்தாராவுடன் காதல்

நயன்தாராவுடன் காதல்

பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில், தனுஷுக்கு உதவி செய்ய வரும் இன்ஜினியர்களில் ஒருவராக சிறிய ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தில் இணைந்து பணியாற்றிய போது தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது.

நிச்சயதார்த்த மோதிரம்

நிச்சயதார்த்த மோதிரம்

கோலிவுட்டின் மிகப் பிரபலமான காதல் ஜோடியாக உள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என பலரும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை மெளனம் காத்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக சமீப காலமாக கூறப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்த மோதிர ஃபோட்டோ பற்றி கேட்டதற்கு, அது தங்களின் நிச்சயதார்த்த மோதிரம் என்ற உண்மையை உடைத்தார் நயன்தாரா.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியின் நினைவாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினர். தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் என விக்னேஷ் சிவன் இயக்கிய படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. அத்துடன் நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களையும் விக்னேஷ் சிவன் தயாரித்தார். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற முக்கோண காதல் கதை கொண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சர்வதேச விருதுகள்

சர்வதேச விருதுகள்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு, தொடர்ந்து பாராட்டை பெற்று வருகிறது. சர்வதேச விருதுகள் பலவற்றையும் இந்த படம் பெற்றுள்ளது.

பாடலாசிரியர் அவதாரம்

பாடலாசிரியர் அவதாரம்

தான் இயக்கிய போடா போடி படத்திற்காக முதல் முறையாக, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதினார். அதைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், மாரி, நானும் ரவுடி தான், ரெமோ, அச்சம் என்பது மடமையடா, யாக்கை, விக்ரம் வேதா, தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, இரும்புதிரை, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார்.

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி

விஜய் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த மாஸ்டர் படத்திற்காக அந்த கண்ண பாதாக்கா, க்விட் பண்ணுடா ஆகிய பாடல்களை எழுதினார். லேட்டஸ்டாக அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள நாங்க வேற மாரி பாடலையும் விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார். இந்த பாடல் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. பல மியூசிக் ஆல்பங்களிலும் விக்னேஷ் சிவன் பணியாற்றி உள்ளார்.

2.22 மணிக்கு செகண்ட் சிங்கிள்

2.22 மணிக்கு செகண்ட் சிங்கிள்

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட உள்ளது. அதுவும் சரியாக பகல் 2.22 க்கு இந்த பாடல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் Two Two Two என துவங்கும் இந்த பாடலில் அனிருத் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X