»   »  ஓணம் ..மல்லுவுட்டில் சோகம்!

ஓணம் ..மல்லுவுட்டில் சோகம்!

Subscribe to Oneindia Tamil


ஓணம் திருநாளையொட்டி வெளியான அத்தனை படங்களுமே ஊத்திக் கொண்டதால் மலையாளத் திரையுலகினர் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனராம்.


இந்த ஆண்டு ஓணத்தையொட்டி மலையாளத்தில் நான்கு படங்கள் தியேட்டர்களுக்கு வந்தன. அலிபாய், நெய்வேத்யம், கிச்சாமணி எம்.பி.ஏ, ஒரே கடல் ஆகியவையே அவை.

நான்கு படங்களும் தோல்விப் படங்களாகி விட்டனவாம். இந்த நான்கு படங்களும் மொத்தமாக ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவானவை. ஆனால் போட்ட பணத்தை கண்டிப்பாக எடுக்க முடியாது என்று கூறும் அளவுக்கு தியேட்டர்களில் ரெஸ்பான்ஸ் படு மோசமாக உள்ளதாம்.

மோகன்லால் நடித்த அலி பாய் படம் மட்டுமே சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற படங்களுக்கு சுத்தமாக வரவேற்பு இல்லையாம்.

ஓணம் நாளன்று அலிபாய் படத்துக்கு 50 சதவீத கலெக்ஷனை எட்டியது. மற்ற படங்களுக்கு வழக்கமாக வரும் கூட்டம் கூட இல்லையாம்.

கேரளாவிலேயே மிகப் பெரிய கலெக்ஷன் சென்டரான எர்ணாகுளத்தில் ஓணம் நாளன்று ஒரே கடல் படம் 12 சதவீத வசூலை எடுத்ததாம்.

ஆனால் ஷாருக்கானின் சக் டே இந்தியாவுக்கு 3 வாரங்கள் கழித்தும் கூட 100 சதவீத வசூல் கிடைத்துக் கொண்டிருக்கிறதாம்.

ஓணம் நாளன்று திரையரங்குகளுக்கு வந்த கூட்டத்தை விட டிவி பெட்டியோடு ஒதுங்கிக் கொண்ட கூட்டம்தான் அதிகமாம். டிவி நிறுவனங்களுக்கு விளம்பர வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

மலையாளத்தில் உள்ள 6 டிவி சேனல்களில் 5 சேனல்களில் மம்முட்டியின் சூப்பர் ஹிட் படமான ராஜமாணிக்கம் உள்ளிட்டவை திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்தால் தியேட்டர்களில் எப்படி கல்லா கட்டும்?

Read more about: malluwood
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil