»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்க 8 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. கமல், விஜய், அர்ஜூன், கார்த்திக், பிரபு என்றுபிரபலங்கள் நடித்த படங்கள் இவை.

  • தெனாலி:

கமல் - ஜோதிகா கலக்கல் ஜோடி நடித்துள்ள படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மீண்டும் ஒரு இசைப் புயல் தமிழகத்தை தாக்கவிருக்கிறது. இயக்கம்கே.எஸ்.ரவிக்குமார்.

ஹேராம் படத்திற்கு பிறகு கமல் நடித்துள்ள தெனாலிக்கு, அமெரிக்கா போய் ரீரிக்கார்டிங் வேலைகளை செய்துள்ளார் ரஹ்மான். 2 பாடல்களைஆஸ்திரேலியாவில் படமாக்கியுள்ளார் ரவிக்குமார்.

முதல் முறையாக இலங்கைத் தமிழ் பேசி அசத்துகிறார் கமல். நல்ல நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் தெனாலி என்கிறார் கமல் சிரித்தபடி. ஜெயராம் - மீனாஜோடியும் படத்தில் உண்டு.

  • ப்ரியமானவளே:

விஜய் - சிம்ரன் ஜோடியின் வித்தியாசமான குடும்பக் காதல் கதை. இசை எஸ்.ஏ.ராஜ்குமார். இயக்கம் செல்வபாரதி. வெளிநாட்டுச் சூழலில்பிளேபாயாக வளர்க்கப்பட்ட விஜய்க்கும், தமிழ் பண்பாட்டை தவிர வேறெதுவும் தெரியாத (?) கட்டுப்பெட்டியான சின்னக்குட்டி சிம்ரனுக்கும்கல்யாணம் நடக்கிறது.

எம்.ஆர்.ராதா பாணியில் தமிழ் பண்பாட்டை வெறுக்கும் விஜய், சிம்ரனின் முயற்சிகளால் தமிழ் பண்பாட்டின் மகத்துவத்தையும், கூடவே சிம்ரனையும் புரிந்துகொண்டு வாழ்வதாக கதை போகிறது.

செல்வபாரதியின் சொந்தச் சரக்கல்ல இது. தெலுங்கில் பவித்ரபந்தம் என்ற பெயரில் நன்றாக ஓடிய படத்தை தான் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

  • வானவில்:

அர்ஜூன் - அபிராமி - பிரகாஷ்ராஜ் ஆகியோரின் முக்கோணக் காதல் கதை. மனோஜ்குமார் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம். இசைதேவா. கடன் வாங்கியாவது கலக்கியிருப்பார்.

கதை தான் புளித்துப் போன முக்கோணக் காதலாம். அர்ஜூன், அபிராமி, பிரகாஷ்ராஜ் மூவருமே ஐ.பி.எஸ். படித்த நண்பர்கள். இதில் அர்ஜூன் மட்டும்போலீஸ் வேலைக்கு போகாமல் கிரிமினலாகி விடுகிறார்.

அவரிடம் மனதை பறி கொடுத்த அபிராமி ஒரு பக்கம், அபிராமியை நினைத்தே உருகும் பிரகாஷ்ராஜ் மறுபக்கம் என கதை பின்னப்பட்டுள்ளது. முடிவுதான் யாரும் எதிர்பார்க்காதது என்கிறார் மனோஜ். ஆனால், படத்தின் விசேஷம் ... தாஜ்மகாலின் உள்ளே போய் படம் எடுத்து வந்துள்ளார்.

  • சீனு:

கார்த்திக் - மாளவிகா ஜோடியின் காதல் கலந்த இசைக் கதை. பி.வாசு இயக்கியுள்ளார். தேவா இசையமைத்துள்ளார்.

பரதம் என்ற பெயரில் மலையாளத்தில் வந்த படத்தின் ரீமேக் தான் சீனு. மலையாளத்தில் நடித்த மோகன்லாலுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்தபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்திக்.

படத்தில் பி.வாசுவும், கார்த்திக்கும் சகோதரர்கள். குடும்பத்திற்காக ஒரு கட்டத்தில் கார்த்திக் பாடகராகிறார். பிறகென்ன சகோதரர்களுக்குஇடையில் விரிசல், பிரச்னைகள் என்று கதை நீள்கிறது. முதன் முறையாக இப்படத்தில் தாடியுடன் வருகிறார் கார்த்திக்.

  • கண்ணுக்கு கண்ணாக:

முரளி - தேவயானி - விந்தியா கூட்டணியின் மீண்டும் ஒரு பாசமலர். இயக்கம் தயாளன். இசை தேவா.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்ட படம். அண்ணன் முரளி, தங்கை தேவயானி. மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்குஆகாது என்ற பழமொழி தான் படத்தின் மையக்கரு.

  • வண்ணத் தமிழ் பாட்டு:

பிரபு - பூனம் ஜோடியின் சின்னத்தம்பி பாணிப் படம். பி.வாசு இயக்கத்தில் தீபாவளிக்கு வரும் 2-வது படம். இசை எஸ்.ஏ.ராஜ்குமார். அப்பா - மகன்இரட்டை வேடம் பிரபுவுக்கு.

பேமிலி சென்டிமென்ட் என்ற அக்மார்க் த்திரையுடன், இசைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. கோபத்தை வரவழைக்க ஒரு பாட்டு, மழைக்கெனஒரு பாட்டு, அதிகாலை எழ ஒரு பாட்டு, காதல் பிறக்க ஒரு பாட்டு, தூங்காமலிருக்க ஒரு பாட்டு என படம் முழுக்க பாட்டு... பாட்டு... ஒரேபாட்டு தானாம்.

  • சினேகிதியே:

தபு - ஜோதிகா - ராணிமுகர்ஜியின் தங்கை ஷப்ராணி என முழுக்க முழுக்க மகளிர் அணி படம் இது. இயக்கம் பிரியதர்ஷன். இசை வித்யாசாகர்.

படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பெண்களே. ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் கொலை நடந்து விட, அதை பெண் போலீஸ் (தபு) எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் சஸ்பென்ஸ். ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு தனது நெருங்கிய தோழிகளை இழந்து விடுவார் என்ற புதிய கருத்தும் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

  • பாளையத்தம்மன்:

ராம்கி - திவ்யா உன்னி - மீனா கூட்டணியின் பக்திமயமான குடும்ப படம். இயக்கம் ராம நாராயணன். இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.

ராம்கியும், திவ்யாவும் குழந்தை பிறந்தால் தாலியை காணிக்கையாக தருவதாக வேண்டுகிறார்கள். குழந்தை பிறந்ததும் தாலியை கழற்றி அந்தகுழந்தை கையில் கொடுத்து உண்டியலில் போடச் செய்யும் போது, குழந்தையும் உண்டியலில் விழுந்து விடுகிறது. உண்டியலில் விழுந்த எல்லாமேஅம்மனுக்கு என்பது ஐதீகம். பின்னர் அம்மனுக்கும், தாய்க்கும் இடையே நடக்கும் குழந்தை சென்டிமென்ட் தான் மீதிக் கதை.

படத்தெல்லாம் பாருங்க.. தீபாவளியை ஜமாய்ங்க..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil