விஜய், உதயநிதி, ரவி இவர்கள் எனக்கு ஜோடியா நடிச்சா சூப்பரா இருக்கும்... என்று கூறிய நடிகை யார் தெரியுமா?
சென்னை: நடிகை ஹன்சிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மஹா. நடிகர் சிம்பு அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் 25-வது படமாக மஹா திரைப்படம் அமைந்தது.
இந்நிலையில் ஹன்சிகா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் மூன்று கதாநாயகர்களை குறிப்பிட்டு பேசியது வைரலாகியுள்ளது.

திருமண செய்தி
31 வயதாகும் ஹன்சிகா இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இந்த ஆண்டிற்குள் ஹன்சிகா மணம் முடிக்கப் போவதாகவும் அவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஒரு அரண்மனையில் நடக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான உறுதியான தகவல்களை ஹன்சிகா தரப்பு இன்னும் வெளியிடவில்லை. ஏற்கனவே நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாக முன்னதாக அறிவித்திருந்தனர். ஆனால் பின்னர் பிரேக்கப் ஆனதாக அவர்களே அறிவித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் வெளிவந்த மஹா திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துணிக்கடையால் போன மார்க்கெட்
ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரித்திக் ரோஷனுடன் க்ரிஷ் திரைப்படத்தின் முதல் பதிப்பான கோயி மில் கயா திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா ஒரு துணிக்கடை விளம்பரத்தில் நடித்ததால் அவருடைய மார்க்கெட் குறைந்ததாக பரவலாக பேசப்பட்டது.

நடிக்கும் படங்கள்
இது ஒரு புறம் இருக்க, இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும் ஐந்து தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. தமிழில் பார்ட்னர், ரவுடி பேபி ஆகிய திரைப்படங்களிலும் தமிழில் இயக்குநர்கள் ஆர்.கண்ணன், விஜய் சந்தர் மற்றும் ஐகோர் இயக்கத்தில் தலா மூன்று படங்களிலும் ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கண்ணன் இயக்கத்தில் சேட்டை படத்திலும் விஜய் சந்தர் இயக்கத்தில் வாலு திரைப்படத்திலும் ஹன்சிகா நடித்துள்ளார்.

விஜய், ரவி, உதயநிதி
இந்நிலையில் ஹன்சிகா சமீபத்தில் கொடுத்திருந்த ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த கதாநாயகன் நல்ல ஜோடியாக அமைந்தார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு கதாநாயகன் அல்ல மூன்று நபர்களை சொல்ல விரும்புகிறேன், ஒன்று நடிகர் விஜய் இன்னொன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது நடிகர் ஜெயம் ரவி என்று தனக்கு பொருத்தமாக இருந்த மூன்று நடிகர்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் ஹன்சிகா.


Click it and Unblock the Notifications











