twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரக்கு பேரை பாரதிராஜா தனக்கு வைக்கிறாரே என்று சங்கடப்பட்ட நடிகர் யார் தெரியுமா?

    |

    சென்னை: இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு பல நடிகர் நடிகைகள் முன்னணி நட்சத்திரங்களாக மாறியிருக்கிறார்கள்.

    நடிகர்கள் கார்த்தி, பாக்யராஜ் நடிகைகள் ராதிகா, ராதா, ரேகா போன்றவர்களை குறிப்பிட்டு கூறலாம்.

    அந்த வரிசையில் மற்றொரு புகழ் பெற்ற நடிகராக மாறியவர்தான் நெப்போலியன்.

    பாரதிராஜாவால் பாதிக்கப்பட்ட 'மோசடி சினிமா' நிறுவனங்கள்! பாரதிராஜாவால் பாதிக்கப்பட்ட 'மோசடி சினிமா' நிறுவனங்கள்!

    பன்முக நபர்

    பன்முக நபர்

    அரசியல்வாதி, நடிகர், தொழிலதிபர், விவசாயி, பாடகர் என்கிற பன்முகங்களைக் கொண்டவர்தான் நடிகர் நெப்போலியன். அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்த நெப்போலியன் அப்போது பார்ப்பதற்கு நடிகர் நாகார்ஜூன் போல இருந்ததால், உதயம் படம் பார்த்தவர்கள் இவரை அவருடன் ஒப்பிட்டு, நீயும் நடிக்க செல் என்று கூறினார்களாம். அதனால் தன்னுடைய அரசியல் வட்டத்தில் இருந்தவர்கள் மூலம் பாரதிராஜாவை வாய்ப்பு தேடி அணுகியுள்ளார்.

    ஜவஹர்லால் நேரு

    ஜவஹர்லால் நேரு

    முதல் சந்திப்பில் எதற்காக நடிக்க ஆசைப்படுகிறாய் என்று பாரதிராஜா கேட்க,"என்னை எல்லோரும் நாகார்ஜுன் போல இருக்கிறேன் என்று கூறினார்கள். அதனால் நாமும் நடித்துப் பார்க்கலாம் என்று வந்துள்ளேன்" என்று ஆர்வத்தில் கூறினாராம். உடனே,"நான் கூடத்தான் கூறுவேன், நீ ஜவஹர்லால் நேரு போல இருக்கிறாய் என்று. உடனே நேருவாகி விடுவாயா?" என்று நக்கல் அடித்தாராம் பாரதிராஜா. அதன் பின்னர் சில கேள்விகளை கேட்டுவிட்டு, அப்போது உருவாகிக் கொண்டிருந்த புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க அழைத்துச் சென்றுள்ளார் பாரதிராஜா.

    அழுத நெப்போலியன்

    அழுத நெப்போலியன்

    படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் 25 நாட்கள் நடிக்க அழைக்காமல், 26-வது நாள் அழைத்து மேக்கப் போட்டு வரச் சொன்னாராம். மேக்கப் முடிந்தவுடன் கண்ணாடியை பார்த்த நெப்போலியனுக்கு அழுகை வந்துவிட்டதாம். காரணம் அப்போது 27 வயதிருந்த நெப்போலியனுக்கு 60 வயது கிழவன் வேடம் போட்டுள்ளனர். இருப்பினும் முதல் வாய்ப்பை சொதப்பி விடக்கூடாது என்பதற்காக பாரதிராஜா சொல்லிக் கொடுத்தது போல் நடித்து நல்ல பெயர் வாங்கினார்.

    சரக்கு பெயர்

    சரக்கு பெயர்

    நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன். படம் வெளியாவதற்கு முன்னர் அவரை அழைத்து, நான் வழக்கமாக அறிமுகம் செய்யும் நடிகர் நடிகைகளின் பெயரை மாற்றுவேன் என்று அவரது தோற்றத்திற்கு ஏற்றார்போல நெப்போலியன் என்று வைத்தாராம். கிறிஸ்தவ பெயராக இருக்கிறதே என்று தயக்கம் இருந்தாலும் அரசியலிலும் சினிமாவிலும் எம்மதமும் எம்மொழியும் சம்மதம் என்று ஏற்றுக் கொண்டாராம். ஆனால் அது சரக்கு பெயராக இருக்கிறதே என்று மேலும் தயக்கப்பட்டுள்ளார். ஆனால் உன் கம்பீரமான உருவத்திற்கு நெப்போலியன் என்கிற கம்பீரமான பெயர் தான் பொருந்தும், நீ நன்றாக வருவாய் என்று பாராட்டினாராம் பாரதிராஜா. அந்தப் பெயரை நண்பர்களிடம் கூறிய போது, ஏன் ராயல் சேலஞ்ச், விஸ்கி என்று பெயர் வைக்க கூடாதா என்று நக்கல் அடித்தார்களாம். அதற்கு, ஆங்கில பெயர் வைத்ததால் நான் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் தாண்டி ஆங்கிலப் படங்களிலும் நடிப்பேன் என்று அப்போது கூறினாராம். அதற்கு ஏற்றார்போல இப்போது ஆங்கிலப் படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் நெப்போலியன் கூறியிருக்கிறார்.

    English summary
    Actor Napoleon's Actual name was Kumaresan. Before the release of the Puthu nellu puthu naathu movie, Bharthiraja called Napolean and told that I would change the names of the actors and actresses usually. From now onwards I call you as Napoleon to suit your appearance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X