நடிகைகளில் பூஜாதான் பெஸ்ட் என்ற இயக்குநர் பாலா... ஏன் அப்படி சொல்றாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க
சென்னை: தமிழ் சினிமாவில் புரியாத புதிராகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் இயக்குநராகவும் இருப்பவர் பாலா.
இயக்குநர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த இயக்குநர்கள் அனைவருமே தரமான படங்கள் எடுக்கக் கூடியவர்கள். அதில் முதன்மையாக இருப்பவர்கள் பாலா மற்றும் வெற்றிமாறன்.
இந்நிலையில் தன் படங்களில் நடித்த கதாநாயகிகளில் சிறப்பாக நடித்தவர் பூஜாதான் என்று பாலா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

பாலா எனும் கிங் மேக்கர்
பொதுவாக நடிகர்களிடம் நடிப்பை பிழிந்து எடுக்கக் கூடியவர் பாலா. அதுவும் வெற்றிகளை காணாதவர்கள் தோல்வி படங்கள் கொடுத்தவர்கள் என்று தேர்ந்தெடுத்து அவருடைய படத்தில் நடிக்க வைத்து பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுப்பார். அந்த வகையில் உங்கள் இயக்கத்தில் நடித்தவர்களில் சிறந்த நடிகர் நடிகையர் யார் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. நான் ஒரு நடிகரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் கடினப்பட்டுதான் நடித்தார்கள்.

விக்ரம் சூர்யா
சேது படத்தில், மருத்துவமனை காட்சிகளை எடுக்கும் போது, விக்ரம் 15 நாட்கள் உணவு சாப்பிடாமல் நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தார். உணவு சாப்பிடாததால் அவருக்கு காது அடைத்துக் கொண்டு காது கேட்காமல் இருக்கும். அதனால் தட்டி தட்டி நான் சொல்வது புரிகிறதா என்று அவருக்கு காட்சிகளை விவரித்து நடிக்க வைத்தேன். சூர்யாவை பொருத்தவரை மேக்கப் போட்டு கருப்பாக ஆளை மாற்றுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் வெயிலில் நிற்க வைத்து இயற்கையாகவே அவரை கருப்பாக்கி நடிக்க வைத்தேன்.

ஆர்யா விஷால் அதர்வா
நான் கடவுள் படத்தில் ஆர்யா செய்த யோகாவை பயிற்சி செய்வதற்கு குறைந்தது 5, 6 மாதங்கள் ஆகும். ஆனால் படப்பிடிப்பிற்கு முன்னர் 5 நாட்கள் மட்டுமே கொடுத்தேன். அப்படியும் வெறித்தனமாக நடித்தார். கண்களை வருத்தி நடிப்பது மிக மிக கடினம். விஷால் டப்பிங் பேசும்போது கூட அவரை அறியாமல் கண்கள் அப்படி மாறிவிடும். அதர்வாவை பொருத்தவரை மலை மீது எடுக்கப்பட்ட காட்சியில் கீழே உருண்டு விழ வேண்டும். துணை நடிகர்கள் செய்த தவறால் 30 முறை ரீடேக் வாங்கினேன். பிறரது பிழைக்காக அவ்வளவு மெனக்கெடுவதற்கு பயங்கரமான மனோ திடம் வேண்டும் என்று அதர்வாவை பாராட்டியிருக்கிறார்

பூஜாதான் சிறந்த நடிகை
நான் கடவுள் திரைப்படத்தில் பார்வை தெரியக்கூடிய வெள்ளை நிற லென்ஸ் அணிந்து பூஜா நடித்ததாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் அந்த லென்ஸை அணிந்து கொண்டால் சுத்தமாக பார்வை தெரியாது. கிளைமாக்சில் மலை மீது ஏறிச் செல்லும் காட்சியில் ஒரு பக்கம் 20 அடி பள்ளம் இருந்தது. அதனால் நான் மைக்கில் ரைட் லெப்ட் என்று சொல்ல சொல்ல, பூஜா அதனை கேட்டு அழுது கொண்டே வேகமாக மலை மீது ஏறுவார். நான் மாற்றி கூறிவிட்டால் பூஜா பள்ளத்தில் விழுந்திருப்பார். அப்படியெல்லாம் சிரமப்பட்டு நடித்ததால் பூஜாதான் என்னுடைய படங்களில் நடித்ததிலேயே சிறந்த நடிகை என்று பாலா கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











