Don't Miss!
- News
அடடே அவரா.. தேநீர் விருந்தில்.. யாருமே எதிர்பார்க்காத சப்ரைஸ் நபர்! ஆளுநரை பார்த்ததும் செம ஹேப்பி
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மிஷ்கினுக்கு பைத்தியம் முத்திவிட்டது என்று நினைத்த நாசர்... காரணம் தெரியுமா?
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
முதன்முறையாக விஜய் சேதுபதி மிஷ்கின் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் அஞ்சாதே திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.
வாரிசு,
துணிவு
படத்துடன்
மோதும்
பிரபாஸின்
'ஆதி
புருஷ்'
ஐமேக்ஸ்-3-D
படம்..அயோத்தியில்
டீசர்
வெளியீடு

பிசாசு 2
நடிகைகள் ஆண்ட்ரியா, பூர்ணா மற்றும் நடிகர்கள் ராஜ்குமார் பிச்சுமணி, சந்தோஷ் பிரதாப், அஜ்மல் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் பிசாசு 2. விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 31-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு ஹிட்டானது. இந்தப் படமும் அந்த அளவிற்கு ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாணக் காட்சிகள்
பிசாசு திரைப்படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படி அமைந்திருந்தது. ஆனால் பிசாசு பார்ட் 2-வில் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகளை படம் பிடித்திருந்தார் மிஷ்கின். ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள நிர்வாணகாட்சிகளை நீக்க போவதாகவும் குழந்தைகளும் சேர்ந்து இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக அந்தக் காட்சிகளை நீக்கி உள்ளதாக மிஷ்கின் தெரிவித்திருந்தார்.

விக்ரமிற்கு பிடித்த படம்
மிஷ்கினின் முதல் படமான சித்திரம் பேசுதடி வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் இயக்க நினைத்தது நந்தலாலா திரைப்படத்தை தான். அந்தக் கதையை தனுஷ், விக்ரம், ரவி கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்களிடம் கூறியிருக்கிறார். விக்ரமிற்கு அந்தக் கதை பிடித்திருந்ததாம். ஆனால் தயாரிப்பாளர் தாணு வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதேபோல 7 ஜி ரெயின்போ காலனியில் நடித்திருந்தார் ரவி கிருஷ்ணாவை வைத்து 35 நாட்கள் ரிகர்சல் பார்த்துள்ளார். ஆனால் ரவியின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எம்.ரத்தினத்திற்கு ஏற்பட்ட பணப் பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அந்தக் கடுப்பில் உடனே வேறொரு கதையை எழுத ஆரம்பித்தாராம்.

பைத்தியம் என்ற நாசர்
37 நாட்களில் அவர் எழுதிய கதைதான் பின்னர் மிகப்பெரிய வெற்றியடைந்த அஞ்சாதே திரைப்படம். அந்தப் படத்தின் கதையை எழுதும் போது ஒரு அறை முழுக்க 200 காகிதங்களை சுவற்றில் ஒட்டி அதன் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிக் கொண்டே இருப்பாராம். அந்த அறையில் ஏற்கனவே தங்கியிருந்த நடிகர் நாசர் ஒருமுறை மிஷ்கினை கவனித்துவிட்டு, உனக்கு பைத்தியம் முத்தி விட்டது என்று கூறியதாக மிஷ்கின் அந்தப் பேட்டியில் வேடிக்கையாக கூறியுள்ளார். பிற்காலத்தில் முகமூடி திரைப்படத்தில் நாசர் மிஷ்கினின் இயக்கத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.