twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தசாவதாரம் படத்தில் ரகுமான் விலகியதும் சுஜாதா வசனம் எழுதாததும் உங்களுக்கு தெரியுமா..?

    |

    சென்னை: நடிகர் கமல் ஹாசன் தற்சமயம் பா.ரஞ்சித் உள்பட இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தையில் உள்ளார்.

    சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து திரைப்படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

    இப்போது பிக் பாஸ் சீசன் ஆறில் தொகுப்பாளராகவும் தனது பணியை தொடரவிருக்கிறார்.

    கமல் – அக்‌ஷரா ஹாசனின் ஸ்டைலிஷ் போட்டோ: அப்பாவ பத்தி மகள் என்ன சொல்லிருக்காங்கன்னு தெரியுமா?கமல் – அக்‌ஷரா ஹாசனின் ஸ்டைலிஷ் போட்டோ: அப்பாவ பத்தி மகள் என்ன சொல்லிருக்காங்கன்னு தெரியுமா?

    கமல் - கே.எஸ்.ரவிக்குமார்

    கமல் - கே.எஸ்.ரவிக்குமார்

    வழக்கமாக அடுத்தவர்களுடைய கதையை வாங்கி அவர்களுக்கு தகுந்த சன்மானத்தை கொடுத்து படங்களில் பெயரையும் போடுபவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஒருமுறை மணிவண்ணன் அவர்களுடைய துணை இயக்குநரும் பத்திரிக்கையாளருமான கல்யாண் என்பவரின் கதையை இயக்குவதற்காக கே.எஸ்.ரவிக்குமார் டிஸ்கஷனில் இருந்துள்ளார். அப்போது, கமலஹாசன் தான் அடுத்ததாக 10 வேடங்களில் ஒரு படம் நடிக்கப் போவதாகவும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதனை தயாரிக்கப் போவதாகவும் நீங்கள்தான் அந்த படத்தை இயக்கி தர வேண்டும் என்று கேட்டாராம்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அதனை எளிதில் கையாளக்கூடிய திறன் உடையவர் கே.எஸ்.ரவிக்குமார். அதனால்தான் 10 வேடங்கள் நடிக்க வேண்டும் என்று கமல் ஹாசன் முடிவு செய்த போது கே.எஸ்.ரவிக்குமார் மட்டும்தான் அதனை இயக்க முடியும் என்று முழுமையாக நம்பி அவரை அழைத்தார். அதனால் டிஸ்கஷனில் இருந்த கதையை பிறகு செய்து கொள்ளலாம் என்று தசாவதாரத்தில் ஒப்பந்தமானார் கே.எஸ்.ரவிக்குமார். அது மட்டுமின்றி அந்த உதவி இயக்குநரான கல்யாண் அவர்களையும் தசாவதாரம் திரைப்படத்தின் பணிகளில் கமலஹாசனுடன் பணிபுரிய வைத்துள்ளார்.

    ஒரு வருடம்

    ஒரு வருடம்

    ஒரு பக்கம் கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, கல்யாண் போன்றவர்கள் தசாவதாரத்திற்கு கதாபாத்திரங்களும் திரைக்கதையும் உருவாக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கமலஹாசன், கிரேசி மோகன் உள்ளிட்டோரும் அவர்கள் பாணியில் உருவாக்கியுள்ளனர். இறுதியில் இரண்டு தரப்பினரும் சேர்ந்து திரைக்கதையையும் கதாபாத்திரங்களையும் தீர்மானம் செய்து அதன் பிறகு உருவான படம்தான் தசாவதாரம்.

    ஏ.ஆர்.ரகுமான் - சுஜாதா

    ஏ.ஆர்.ரகுமான் - சுஜாதா

    மிகப்பெரிய பொருட்சளவில் எடுக்கப்பட்டதால் தசாவதாரம் படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரகுமானை அணுகியுள்ளார்கள் கமல்ஹாசன் மற்றும் ரவிக்குமார். ஆனால் சில காரணங்களால் ரகுமான் இசையமைக்க மறுத்து விட்டாராம். அதனால்தான் கமலஹாசன் இந்தி இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார் என்று கல்யாண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல படத்தினுடைய வசனகர்த்தாவாக முதலில் சுஜாதாதான் ஒப்பந்தமாகி இருந்தார். கமல் நடித்திருந்த காக்கிச் சட்டை திரைப்படத்தில் அறிவியல், ஏவுகணை என்று இருந்ததால் அதில் கைதேர்ந்தவரான சுஜாதாதான் எழுத்தாளராக பணியாற்றினார். அந்த வகையில் தசாவதாரம் படமும் அறிவியலை மையப்படுத்தி இருந்ததால், சுஜாதா வசனகர்த்தாவாக ஒப்பந்தமாகி இருந்தாராம். ஆனால் திடீரென்று அவர் இறந்து போகவே கமலஹாசனே அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக மாறினார் என்று கல்யாண் கூறியுள்ளார்.

    English summary
    Actor Kamal Haasan is currently in talks to act in the direction of young directors including Pa. Ranjith. He also produces films with Sivakarthikeyan, Udayanidhi Stalin and others. Now she will continue her work as host in Bigg Boss season 6 Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X