Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் விமலுக்கு முதல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது யாருனு தெரியுமா?இவர் எப்பவுமே ஸ்மார்ட் தான்!
சென்னை: நடிகர் விமல் 'பசங்க திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' திரைப்படம் பல விருதுகளை குவித்தது.
பசங்க படத்தில் நடிக்க நடிகர் விமலுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அனைத்து
பாலிசியையும்
மாற்றிய
டாப்
நடிகர்..
இந்த
முறை
பெரியளவில்
புரமோஷன்
பண்ண
முடிவாம்!

சினிமாவில் வாய்ப்பு தேடும் நண்பர்கள்
நடிகர் விமல், விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றிருந்த காலகட்டத்தில், அவ்வபோது பல கம்பெனிகளை தேடி அலைவதும் அவர்கள் வைக்கும் ஆடிஷனில் கலந்து கொள்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படி ஒரு நாள் விஜய் சேதுபதி 'பசங்க' திரைப்படத்தின் ஆடிஷன் நடந்து கொண்டிருந்ததை அறிந்து அதில் கலந்திருக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு சில அங்க அடையாளங்களை சொல்லி இந்த மாதிரி கேரக்டர் உள்ளவரை தான் நடிக்க வைப்பதாக உள்ளோம், என்று சொல்லி இருக்கிறார்.

விஜய்சேதுபதி விமலுக்கு பரிந்துரை செய்தார்
விஜய் சேதுபதி, விமலை தொலைபேசியில் அழைத்து இயக்குநர் சொல்வதை பார்த்தால் உன்னை மாதிரி ஒரு நடிகரை தான் தேடுவதாக தெரிகிறது, நீ போய் அந்த ஆடிஷனில் கலந்துக்கொள் கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஆடிஷனில் கலந்து கொண்ட விமல்
விமல் ஆடிஷனில் கலந்து கொண்ட போது மீசை, தாடி எல்லாம் சேவிங் செய்து இருந்ததை, பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் கேமராமேன் பிரேம்; இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மீசை, தாடியுடன் இருக்கிற ஒரு நபர் தான் தேவை என்று கூறியுள்ளனர்.
பின்பு கேமராமேன் பிரேமிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீசை தாடியுடன் நடித்த பிங்கோ விளம்பரத்தை காட்டி இருக்கிறார்; ஓ இது நீங்க தான என்று கேட்டு , இதை இயக்குநரிடம் காண்பித்த போது ஒரு 10, 15 நாட்கள் கழித்து மீசை, தாடி வளர்த்த பின்பு வர
சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளர் விமலுக்கு கொடுத்தா முதல் சம்பளம்
ஒரு 15 நாட்கள் கழித்து மீண்டும் இயக்குநரை சந்தித்தபோது ஒரு சில வசனங்களை கொடுத்து பேச சொல்லி இருக்கிறார்,
அவர் பேசியதை பார்த்த இயக்குநர், சரி ஓகே நீங்க தான் இந்த படத்தில் ஹீரோ என்று சொன்னவுடன்; தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் பிடித்து போய், விமலுக்கு எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சசிகுமார் 10 ஆயிரம் செக் கொடுத்திருக்கிறார்.'பசங்க' திரைப்படம் வெளியான பின்பு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பல விருதுகளை குவித்தது.