twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தில்லானா மோகனாம்பாள் படத்தை ஏன் அனைவருக்கும் பிடிக்கும் தெரியுமா?...சுவாரஸ்ய தகவல்கள் இதோ

    |

    சென்னை : தில்லானா மோகனாம்பாள், தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படங்களில் மிக முக்கியமான படம். இந்த படம் ரிலீசான சமயத்தில் நாம் பிறந்திருக்கவே மாட்டோம். ஆனாலும் இந்த படம் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

    தில்லானா மோகனாம்பாள் என பெயர் சொன்னதும் நாதஸ்வர கலைஞராக வரும் சிவாஜி கணேசன், பரத நாட்டிய கலைஞராக வரும் பத்மினி, வைத்தியாக வரும் நாகேஷ், ஜில் ஜில் ரமாமணியாக வரும் மனோரமா, தவில்காரராக வரும் பாலையா என அனைவரும் கண்முன் வந்து போவார்கள்.

    இதுவும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட, தேசிய விருது வென்ற படம் தான். கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது தான். அதற்கு பிறகு கரகாட்டக்காரன், சங்கமம் என எத்தனை படங்கள் வந்தாலும் தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு முன் நிற்க முடியாது. இதற்கு என்ன காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்.

    16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா! 16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா!

     54 வருடங்களான தில்லானா மோகனாம்பாள்

    54 வருடங்களான தில்லானா மோகனாம்பாள்

    கொத்தமங்களம் சுப்பு எழுதி தில்லானா மோகனாம்பாள் என்ற நாவலை அதே பெயரிலேயே, கொஞ்சமும் சுவாரஸ்ரயம் மாறாமல் எடுத்திருந்தார் டைரக்டர் ஏ.பி.நாகராஜன். 1968ம் ஆண்டு ஜுலை 27 ம் தேதி இந்த படம் ரிலீசானது. சிறந்த நடனம், சிறந்த இசைக்காகவே இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்தது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் வசனம், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என எதுவும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் எடுக்கப்பட்டது தான் இந்த படம் காலத்தை கடந்தும் பேச வைத்துள்ளது.

     சிவாஜியையே திணற வைத்த படம்

    சிவாஜியையே திணற வைத்த படம்

    நடிப்புன்னா சிவாஜி, சிவாஜின்னா நடிப்பு என சொல்கிறோம். ஆனால் அந்த சிவாஜியின் நடிப்பிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நடன திறமையை காட்டி இருப்பார் பத்மினி. நாதமா? பரதமா? என்ற சந்தேகம் படத்தில் வரும் சீனில் மட்டுமல்ல படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வரும். தில்லானா மோகனாம்பாள் படம்ரிலீசாகி இன்றுடன் 54 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இந்த படத்தை மிஞ்சும் அளவிற்கு கலைஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை, காதல், மோதல், சோகம்,பயணத்தின் போது சந்திக்கும் சிக்கல்களை உணர்வுபூர்வமாகவும், காமெடியாகவும் யாரும் சொல்லவில்லை. கரகாட்டக்காரன் படமே இந்த படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் என கங்கை அமரனே பல முறை சொல்லி உள்ளார்.

    மறக்க முடியாமா நலந்தானாவை

    மறக்க முடியாமா நலந்தானாவை

    கே.வி.மகாதேவன் இசையில் தில்லான மோகனாம்பாள் படத்தில் 8 பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.வார்த்தைகளுடனான பாடல்கள் என்று பார்த்தால் 3 பாடல்கள் தான். மற்ற அனைத்தும் சவுண்ட் டிராக் தான். ஆனால் இத்தனை பாடல்கள் படத்தில் வருகிறதே தெரியாத அளவிற்கு படத்தை ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பார்கள். காதலையும், தான் சார்ந்த கலையின் மீதான கர்வத்தையும் பாட்டின் வரிகளில் மிக அழகான வார்த்தைகளால் கொண்டு வந்திருப்பார் கவிஞர் கண்ணதாசன். இந்த படத்தின் பாடல்களில் உள்ள சுவாரஸ்யம் என்ன தெரியுமா? ஒவ்வொரு பாடலும் ஒரு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒவ்வொரு ராகமும் படத்தின் கதை மற்றும் கேரக்டருடன் தொடர்புடையதாக இருக்கும். மறைந்திருந்து பார்க்கும் பாடல ஷண்முக பிரியா ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.அதாவது ஹீரோ ஷண்முக சுந்தரம் மீதான காதலை மறைமுகமாக சொல்லும் பாடல். அதனால் ஷண்முக பிரியா ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். நலந்தானா பாடல் நிலமானி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கிட்டதட்ட சிவரஞ்சனி ராகம் போல இருக்கும்.

    அனைத்தும் நிஜமாக இருக்கும்

    அனைத்தும் நிஜமாக இருக்கும்

    இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயின் முதல் சிவாஜியின் இசை குரூப்பில் இருப்பவர்கள் வரை எந்த கேரக்டரை கவனித்து பார்த்தாலும் அவர்கள் நடித்துள்ளார்கள் என்பதை சொல்லவே முடியாது. நிஜமான கேரக்டர்களாக வாழ்ந்திருப்பார்கள். அத்தனை பேரையும் நிஜமாக பார்ப்பது போன்ற உணர்வு மட்டுமே அனைவரின் மனதிலும் வறும். அது தான் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம்.சிவாஜி நாதஸ்வரம் வாசிப்பது துவங்கி, பாலைய்யா தவில் வாசிப்பது வரை எதுவும் நடிப்பு என ஒருவராலும் சொல்ல முடியாது. அத்தனை தத்ரூபமாக இருக்கும். அதனால் தான் பல ஆண்டுகள் கழித்து 2010ல் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட போதும் தில்லானா மோகனாமபாள் படத்தை பலரும் விரும்பி பார்த்தார்கள்.

    பான் வேர்ல்ட் படமா இருந்திருக்கு

    பான் வேர்ல்ட் படமா இருந்திருக்கு

    சிவாஜியின் நடிப்பு திறமைக்கு உதாரணமாக சொல்லப்படும் டாப் 10 படங்களில் தில்லானா மோகனாம்பாள் கண்டிப்பாக இருக்கும். அந்த காலத்திலேயே 175 நாட்கள் ஓடி படம் இது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.இப்போ என்ன பான் இந்தியா படம் எடுக்கிறார்கள். தில்லானா மோகனாம்பாள் அந்த காலத்திலேயே பான் வேர்ல்டு படமாக இருந்துள்ளது. 2010 ல் ரஷ்யாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்திரன், சிவாஜி, அங்காடி தெரு படங்களுடன் தில்லானா மோகனாம்பாள் படமும் திரையிடப்பட்டுள்ளது.

    இதெல்லாம் உண்மை தானா?

    இதெல்லாம் உண்மை தானா?

    50 வருடங்களுக்கு முன்பே தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு 11 பக்கத்திற்கு விமர்சனம் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பல பல்கலைக்கழங்களில் பரதம் மற்றும் நாதஸ்வர இசை பற்றிய படிப்புக்களுக்கு தில்லானா மோகனாம்பாள் படம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 8வது உலக அதிசயம் சிவாஜி என பல்வேறு தரப்பு மக்களால் கொண்டாடப்பட வைத்த படம் தில்லானா மோகனாம்பாள் தான்.

    English summary
    Classic hit movie Thillana Mohanambal movie completes 54 years of theatrical release. Sivaji Ganeshan, Padmini, Manorama, Nagesh, Balaiah and others starred Thillana Mohanambal was released in the year JUly 27th 1968. Here we discussed about why this movie was so popular till now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X