For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் ரொம்பலாம் படிக்கமாட்டேன்னு சொன்ன சிவகார்த்திகேயன்.. அதுக்கு அர்ஜுன் ரியாக்ஷன பாத்தீங்களா?

  |

  சென்னை : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற பலருள் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

  கலக்கப்போவது யாரு சீசன் 3இல் கண்டஸ்டண்ட் அறிமுகமானவர் அந்த சீசனில் டைட்டில் வென்றார்.

  நடிகர் சிவகார்த்திகேயன் எவ்வாறு படிப்பார் என்று தானே சொன்ன வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

   பாராட்டுக்களை பெற்றாலும்.. பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டலையே.. ராக்கெட்ரி முதல் நாள் வசூல் எவ்வளவு? பாராட்டுக்களை பெற்றாலும்.. பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டலையே.. ராக்கெட்ரி முதல் நாள் வசூல் எவ்வளவு?

  விஜய் டிவி பிரபலம்

  விஜய் டிவி பிரபலம்

  விஜய் டிவி பிரபல நிகழ்ச்சியான அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் சிவகார்த்திகேயன் . சிவகார்த்திகேயனின் எதார்த்தமான பேச்சும், தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் சுபாவமும் இவரை ஒரு முன்னணி நடிகராக கொண்டுவர உதவியது. மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஏற்கனவே பல ரசிகர்களை பெற்றிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் மூலம் அனைவரின் மனதையும் வென்றார்.

  தொடர்ந்து ஹிட்

  தொடர்ந்து ஹிட்

  3,கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் போன்ற பல படங்கள் தொடர்ந்து நடித்து வந்த நடிகை சிவகார்த்திகேயன், கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் நடித்த டாக்டர் டான் போன்ற படங்களையும் சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமே தயாரித்தது.

  பன்முக திறமை

  பன்முக திறமை

  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், பின்னணி பாடகராக அறிமுகமான சிவகார்த்திகேயன் பல படங்களில் பின்னணி பாடகர் ஆகவும் உள்ளார். கோலமாவு கோகிலா, நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலையும், எதற்கும் துணிந்தவன் படத்தில் சும்மா சுர்ருன்னு பாடலையும், பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலையும் எழுதி உள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான டான் திரைப்படத்தில் பிரைவேட் பார்ட்டி என்ற பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோவாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளோடு தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கிறார்.

  சுமாரா படிப்பேன்

  சுமாரா படிப்பேன்

  நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அவர் ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆகவே இருந்து வருகிறது. தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி அவர் கூறும் ஓவ்வொரு விஷயங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தான் எவ்வாறு படிப்பார் என்றும் கூறியுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்," நான் ரொம்ப நல்லா எல்லாம் படிக்க மாட்டேன் வெறும் 80% மார்க் மட்டுமே எடுப்பேன் இன்று கூறியவுடன், அருகில் இருந்த நடிகர் அர்ஜுன் ஷாக் ஆகி 80% நல்லாவே இல்லையா? என்று கூறி நாலாம் 35,40,36 இதுபோல் ஜஸ்ட் பாஸ் மட்டுமே நான் எடுப்பேன் என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூறியுள்ளார் .

  அர்ஜுன் ரியாக்ஷன்

  அர்ஜுன் ரியாக்ஷன்

  அதை கேட்ட சிவகார்த்திகேயன் , அந்த மாதிரி மார்க் எல்லாம் எங்க வீட்டில் எடுத்திருந்தால் என்னை சுட்டுருப்பாங்க சார் என்று கலகலப்பாக கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இவர் கலகலப்பாக பேசிய இந்த விஷயமும் ஆக்ஷன் கிங் அர்ஜுனனின் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. சிவகார்த்திகேயன் அண்ணா நீங்க தான் எங்களுடைய ரோல் மாடல் என்று அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

  English summary
  Do you See Arjun Reaction After Sivakarthikeyan said he is an average Student in Studies
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X