»   »  துபாய் கலைவிழா: ரெடியாகும் நட்சத்திரங்கள்!

துபாய் கலைவிழா: ரெடியாகும் நட்சத்திரங்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாயில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நட்சத்திர கலை விழாவில் விஜய், விக்ரம், த்ரிஷா சிநேகா உள்பட பெரும்பாலானமுன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர். ரஜினி, கமலுக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக துபாயில் நட்சத்திர கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 19 மற்றும்20 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்க செயலாளர் விஜயகாந்த், பொதுச் செயலாளர் சரத்குமார், துணைத்தலைவர்கள்நெப்போலியன், எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனனர்.

இந்தக் கலைவிழாவில் இப்போதைக்கு ரஜினி, கமல் தவிர அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் கலந்து கொள்வார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், விக்ரம், சிம்பு, சூர்யா, த்ரிஷா, சினேகா உட்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலைவிழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.

ரஜினிகாந்த் தற்போது ரிஷிகேஷில் உள்ளதால் அவர் சென்னை திரும்பியதும் கலைவிழாவில் கலந்து கொள்ளுமாறு விஜயகாந்த்நேரடியாக சென்று அழைப்பு விடுக்க உள்ளாராம்.

ஏற்கனவே சந்திரமுகி பெரும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி, இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக துபாய் கலைநிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கமலையும் இந்த விழாவில் பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவருக்கும் விஜயகாந்த் நேரடியாக சென்றுஅழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளார். ரஜினியும், கமலும் இதில் பங்கேற்றால் விழா களைகட்டி விடும் என்று விழாக்கமிட்டியினர்கூறுகின்றனர்.

ஏற்கனவே மலேஷியா, சிங்கப்பூரில் நட்சத்திர கலைவிழாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் துபாய்கலைவிழாவையும் சிறப்பாக நடத்த முடியும் என்றார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.

இந்தக் கலைவிழாவில் பல புதுமையான நடன நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இது தவிர நகைச்சுவை நிகழ்ச்சி,மிமிக்ரி மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் பட்டியலையும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் கலை நிகழ்ச்சி தொடர்பானவிவரங்களையும் நடிகர் சங்கம் தயாரித்து வருகிறது. இந்த விவரங்கள் ரெடியானவுடன் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகைதொடங்கும்.

பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் நடிகர், நடிகைகளுக்கு நடன பயிற்சி அளிக்கின்றனர்.

துபாயில் நட்சத்திரங்கள் தங்குவதற்கு ஹோட்டல்களில் இப்போதே அறைகளும் புக் செய்யப்பட்டு விட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil