twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட்: ஒரிஜினலை காலி செய்த டப்பிங் படங்கள்

    By Shankar
    |

    இந்த வெள்ளிக்கிழமை கோடம்பாக்கத்தில் நேரடி தமிழ்ப் படங்களைவிட டப்பிங் படங்களே அதிகம் வெளியாகும் சூழ்நிலை.

    மற்ற மொழிகளில் ப்ளாப்பான படங்களைக் கூட அமர்க்களமான விளம்பரங்களுடன் தூசு தட்டி தமிழில் வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.

    தமிழ் ரசிகர்களுக்கு ஒரிஜினல் படங்களை விட டப்பிங் படங்கள் பிடித்துவிட்டதா... அல்லது தமிழ் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் சுணங்கி நிற்கிறார்களா?

    இந்த ஆண்டு மட்டும் 250 டப்பிங்

    இந்த ஆண்டு மட்டும் 250 டப்பிங்

    இந்த ஆண்டில் இதுவரை 250 டப்பிங் படங்கள் தமிழகத்தில் வெளியாகியுள்ளன என்றால் நம்ப முடிகிறதா... வாரா வாரம் சராசரியாக 3 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன என்றால், அதை மிஞ்சும் வகையில் 5 டப்பிங் படங்கள் வெளியாகின்றன.

    தொலைக்காட்சிகள்

    தொலைக்காட்சிகள்

    இதற்கு முக்கிய காரணம் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்ற அறிவிப்போடு ஏதாவது ஒரு புதிய படத்தைப் போடத் துடிக்கும் தொலைக்காட்சிகள்தான். அவற்றுக்குத் தேவை ஒரு படம். அது நல்ல படமா.. நேரடிப் படமா என்ற கவலை இல்லை. தமிழில் வசனங்கள் இருந்தால் போதும்.

    வெறும் ரூ 2 லட்சம் போதும்...

    வெறும் ரூ 2 லட்சம் போதும்...

    மக்கள் பார்க்காவிட்டாலும் கூட இந்த டப்பிங் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் கொள்ளை லாபம். எப்படி தெரியுமா? ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்... அட அவ்வளவு ஏன் போஜ்புரி படத்தைக் கூட விட்டுவைக்காமல் டப்பிங் உரிமை பெறுகிறார்கள். இவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ 2 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரைதான். 20 கோடி போட்டு படமெடுத்து தலையில் துண்டு போட்டுக் கொள்வதைவிட, குறைந்தபட்சம் ரூ 2 லட்சத்தை முதலீடு செய்து ஒரு டப்பிங் படத்தை ரெடி பண்ணிவிடலாம் ஒரு வாரத்துக்குள்.

    பத்து மடங்கு லாபம்

    பத்து மடங்கு லாபம்

    அந்தப் படத்தை தொலைக்காட்சிகளுக்கு ரூ 20 லட்சம் வரை விற்க முடியும். அது அவரவர் சாமர்த்தியம். தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யலாம். எப்படியும் முதல் மூன்று நாட்கள் சுமாரான கூட்டத்தோடு ஓடிவிடும். ரூ 2 லட்சம் கிடைத்துவிடும். ஆக பத்துமடங்கு லாபம் நிச்சயம். அதுவும் ஹாலிவுட் படங்கள் என்றால் தியேட்டர்களிலேயே நல்ல வசூல் கிடைக்கும். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கொரிய பாம்புக் கதைப் படத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, அதை ருத்ரநாகம் என்ற பெயரில் ரிலீஸ் செய்து பல கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் அள்ளியவர் ராமநாராயணன் என்பது நினைவிருக்கலாம் (இந்த வாரமும் ஒரு ருத்ரநாகம் வருகிறது. இது வேறு படம்).

    இந்த வாரம்...

    இந்த வாரம்...

    இந்த வாரம் நேரடி தமிழ்ப் படங்களாக காதலே என்னைக் காதலி, சத்திரம் பேருந்து நிலையம் போன்ற நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. இவை சிறு பட்ஜெட் படங்கள்.

    வேட்டைப் புலி

    வேட்டைப் புலி

    இன்று வெளியாகும் டப்பிங் படங்கள் ஞாபகங்கள் தாலாட்டும், வேட்டைப் புலி, ருத்ரநாகம்.

    தெலுங்கில் வெளியாகி படு தோல்வியடைந்த வானாவின் டப்பிங்தான் ஞாபகங்கள் தாலாட்டும். வினய் - லட்சுமி ராய் தவிர தெரிந்த முகங்கள் யாருமில்லை.

    கன்னடத்தில் வந்த லேடி புரூஸ்லியின் தமிழாக்கம்தான் வேட்டைப் புலி. இரண்டு ஆண்டுகள் பழைய படம் இது. ஹாலிவுட்டில் வெளியான பசிபிக் ரிம்-மின் டப்பிங் ருத்ரநாகம். இவை தவிர இன்னும் மூன்று டப்பிங் படங்கள் இன்று வெளியாகப் போவதாக விளம்பரங்கள் வந்தன. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காததால் அடுத்த வாரத்துக்கு காத்திருக்கின்றன.

    English summary
    There are more dubbing films releasing this Friday (July 5) than straight Tamil films. The dubbed films releasing are Nijabagangal Thalattom , Vettai Puli and Ruthranagaram. This year there will be nearly 250 films dubbed into Tamil, more than straight Tamil releases!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X