»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜேஜே படத்தைத் தொடர்ந்து எதிரி படத்திலும் மாதவனுக்கு இரட்டைக் குதிரை சவாரி

இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சதா, கனிகா நடிக்கிறார்கள். கனிகாவை விட சதாவுக்குத்தான் படத்தில்கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

வேலையில்லாத பட்டதாரி சந்தர்ப்ப சூழ்நிலையால் ரவுடியாக மாறுவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளைசமாளிப்பதும்தான் கதை. ரவுடியாக மாறும் வேலையில்லாத பட்டதாரியாக மாதவன் நடிக்கிறார்.

தன் மீதிருந்த அமுல் பேபி முத்திரையை ரன் படம் மூலம் ஓரளவுக்கு மாற்றினார் மாதவன். இவரால் ஆக்ஷன்கதையும் பண்ண முடியும் என்ற நம்பிக்கை அதன் பிறகே இயக்குநர்களுக்கு வந்தது. அந்தத் தைரியத்தில் தான்இந்தப் படத்தில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்பதால் காமெடி கட்டாயம் உண்டு. காமெடிக்காக விவேக்கைபோட்டிருக்கிறார்கள். காமெடி, காதல், அடிதடி கலந்து எடுக்கிறார்கள்.

காதல் காட்சிகளில் மாதவனும், சதாவும்புகுந்து விளையாடியிருக்கிறார்களாம் (பட ஸ்டில்ஸ்லேயே தெரியுதே).

படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் வில்லனாக ரீ-எண்ட்ரி ஆகிறார் நடிகர் ரகு என்ற ரகுமான்.விஜயனுடன் இணைந்து வில்லனாக மிரட்டியிருக்கிறாராம்.

பெரும்பாலும் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் பாடல்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாது. அவரது சிலபடங்களில் பாடல்கள் ஹிட்டானது இசையமைப்பாளரின் தயவினால் நடந்ததாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியவத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

பாடல் சூட்டிங் வெளிநாடு செல்வதுபோல், பாடல் கம்போசிங்க்காகவும் விமானம் ஏறுவது தமிழ் சினிமாவில்அதிகரித்து வருகிறது.எதிரி படத்தின் பாடல் கம்போசிங்கை கே.எஸ்.ரவிக்குமாரும், இசையமைப்பாளர்யுவன்சங்கர் ராஜாவும் லண்டன், சுவிஸர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வைத்து முடித்திருக்கிறார்கள்.பாடல்கள் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட்டாக அமையும் என்கிறார்கள்.

ஏவி.எம் பிரசாத் ஸ்டியோக்களில் பிரம்மாண்டமான செட் அமைத்து மாதவன்- சதா ஆடிய டூயட்படமாக்கப்பட்டது. இயக்குவது ரவிக்குமார் என்பதால் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வருகிறது.திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடப்பதால், டப்பிங் வேலைகளும் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil