»   »  தொகுக்கும் அனுராதா!

தொகுக்கும் அனுராதா!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் குலுக்கல் நாயகி அனுராதா டிவி தொகுப்பாளினியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

சில்க் ஸ்மிதா காலத்தில் தென்னிந்தியத் திரையுலகை தனது குலுக்கல் ஆட்டத்தால் கலக்கி வந்தவர் அனுராதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரு தென்னிந்திய மொழிப் படத்தையும் விடாமல் தனது ஆட்டத்தால் அதகளம் செய்தவர் அனுராதா.

இப்போது ரிட்டயர்ட் ஆகி விட்ட அனுராதா, தனது மகள் அபிநயஸ்ரீயை நடிகையாக்கியுள்ளார். அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. நடித்துப் பார்த்தும், குலுக்காட்டம் போட்டுப் பார்த்தும் கூட அபி க்ளிக் ஆகவில்லை. ஆனால் தெலுங்கில் அவரது கிளாமருக்கு ஓரளவு வரவேற்பு இருப்பதால் அங்கு காலம் தள்ளி வருகிறார்.

அனுராதாவும் இடை இடையே வில்லியாக, காமெடி நடிகையாக நடித்துப் பார்த்தார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை.

இந்த நிலையில் திடீரென டிவி தொகுப்பாளினியாக புது அவதாரம் எடுத்துள்ளார் அனுராதா. தமிழன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்க ஆரம்பித்துள்ளாராம் அனுராதா.

இப்படியாவது கொஞ்ச காலத்தை ஓட்டலாம் என்ற எண்ணத்தில்தான் டிவி தொகுப்பாளினியாக களம் இறங்கியுள்ளாராம். அவரைத் தேடி டிவி சீரியல்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளதாம். இருந்தாலும் இதுகுறித்து இன்னும் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.

தொகுக்க வந்தவர் நடிக்கவும் வர மாட்டாரா, என்ன?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil