»   »  இன்று இளையராஜா பிறந்த நாள்... குவிந்தனர் ரசிகர்கள்!

இன்று இளையராஜா பிறந்த நாள்... குவிந்தனர் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரைப் பார்க்கவும், அவருடன் படமெடுத்துக் கொள்ளவும் ஏராளமான ரசிகர்கள் சென்னையில் குவிந்தனர்.

காமராஜர் அரங்கில் 'மேஸ்ட்ரோ மியூசிக்' சார்பில் இன்று நடக்கும் இளையராஜா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டு ராஜாவை வாழ்த்தினர்.

Fans wished Maeastro Ilaiayaraaja with garlands

ஏராளமான ரசிகர்கள் மாலைகள், பூங்கொத்துகளுடன் ராஜாவைச் சந்தித்து வாழ்த்துக் கூறினர். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதே காமராஜர் அரங்கில் இன்று பிற்பகலில் டாக்டர் கு ஞானசம்பந்தன் தலைமையில், இசைஞானியின் இசை செவியோடு கலப்பதா? உயிரோடு கலப்பதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் இளையராஜா பங்கேற்கிறார்.

இன்று மாலை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்கள் பங்கு பெறும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இன்று கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானதால் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்துமாறு கேட்டுக் கொண்டார் இளையராஜா.

English summary
Maestro Ilaiyaraaja is celebrationg his birthday with his fans at Kamarajar Arangam today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil