»   »  "ஏ" சர்டிபிகேட் படங்கள் அதிகரிப்பு தமிழ் திரையுலகில் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் "ஏ சான்றிதழ் படங்கள் கிடுகிடுவென அதிகரித்து வருவதாக மத்தியதணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் சீரழிந்து விட்டது, திரையுலகைக் காக்க யாரும் முன்வரவில்லை, டிவியில் புதியபடங்களைப் போடுவதால் திரையுலகம் நசிந்து விட்டது என்று அடிக்கடி தமிழ்த் திரையுலகினர் ஒப்பாரி வைப்பது அதிகரித்துவருகிறது.ஆனால் தமிழ்ப் படங்களின் தரம் தாழ்ந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கலாச்சாரச் சீரழிவுக்குவித்திடும் வகையிலான காட்சிகள் அடங்கிய படங்கள்தான் தற்போது அதிக அளவில் கோலிவுட்டில் தயாராவதாக மத்திய தணிக்கை வாரியம் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.1998ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் 72 சதவீத படங்கள் "யு சான்றிதழ் பெற்ற அதாவது, அனைவரும் பார்க்கத் தகுந்தபடங்களாக வெளியாகின. ஆனால் 2004ல் வெளியான 62 சதவீத படங்கள் "ஏ சான்றிதழ் அதாவது வயது வந்தோர் மட்டும்பார்க்கக் கூடிய படங்களாக அமைந்துள்ளன.சென்னை நகரில் உள்ள 50 கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மத்திய தணிக்கை வாரியம், தமிழ்த் திரைப்படங்களில் வன்முறைமற்றும் ஆபாசக் காட்சிகள் குறித்த கருத்துக் கணிப்பையும் மேற்கொண்டது. இதன் முடிவுகளின் பிரதியை தென்னிந்திய திரைப்படவர்த்தக சபைக்கும் தணிக்கை வாரியம் அனுப்பி வைத்துள்ளது.ஈவ் டீசிங், பாலியல் பலாத்காரம் போன்ற சமூகக் கேடுகளுக்கு, தமிழ்த் திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகள், பாலியல்உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள்தான் காரணம் என்று பெரும்பாலான மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.போஸ்டர்கள், கட் அவுட்டுகள் போன்றவற்றினாலும் பாலுணர்வு தூண்டப்படுவதாகவும் கணிசமான எண்ணிக்கையிலானமாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வின் அடிப்படையில் புதிதாக 11 கட்டுப்பாடுகளை தணிக்கை வாரியம் அமல்படுத்தவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 11 கட்டுப்பாடுகள்:பெண்ணின் மார்புகளை மிக நெருக்கமாக காட்டும் காட்சிகள், மார்பு பிளவுகளை காட்டும் காட்சிகள், மார்புகளை உரசுவதுபோன்ற காட்சிகள், ஓடும்போதோ அல்லது நடனமாடும்போதோ மார்புகள் குலுங்குவது போன்ற காட்சிகள், நீச்சலடிக்கும்போது மார்புகள் அசைவதை காட்டும் காட்சிகள், தொப்புளை மிக நெருக்கமாக காட்டுவது, உதட்டுடன் உதடுகளைவைத்து கிஸ் அடிப்பது (கமலுக்குத்தான் கஷ்டம்!), நடனமாடும்போது இடுப்பை மிக நெருக்கமாக காட்டுவது, ஆணும், பெண்ணும் கட்டிப் புரண்டு ஆடுவது, பாடுவது, பெண்ணின் பின்புறத்தை மிக நெருக்கமாக காட்டுவது, மிக சிறியடிரவுசரை பெண்கள் அணிவது போன்ற காட்சிகள் இனிமேல் படங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது.இந்தக் காட்சிகள் இல்லாமல் இனிமேல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். இதில் ஏதாவது ஒரு காட்சி இடம் பெற்றால் கூடஅந்தப் படத்திற்கு "ஏ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.அதேசமயம், படங்களில் காட்டப்படுவதைப் போல, கல்லூரி மாணவர்கள் நடைமுறையில் மிக மோசமானவர்களாக இல்லைஎன்றும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று கல்லூரி மாணவர்களை மிக மோசமாகசித்தரிக்கும் காட்சிகளை தணிக்கை வாரியம் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் வருவதில் தவறு இல்லை என்றும், நிஜ வாழ்க்கையில் சிகரெட் சர்வசாதாரணமாக புழங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ள மாணவர்கள், மது அருந்தும் காட்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்என்றும் கோரியுள்ளனர்.அதேபோல, கதாநாயகிகள் பெரும்பாலோர் மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வருவதாகவும் பெரும்பாலான மாணவ,மாணவியர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மாணவிகளில் 45 சதவீதம் பேர் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும், 90 சதவீதம் பேர் பெண்கள் புகை பிடிப்பதுபோன்ற காட்சிகளை காட்டக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.குடும்பக் கதைகளைக் கொண்ட படங்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு தருவதில்லை என்ற கேள்விக்கு, இதுபோன்ற கதையம்சம்கொண்ட தொலைக்காட்சித் தொடர்கள் நிறையவே டிவிகளில் வருவதால் செலவு செய்து தியேட்டருக்குச் சென்று பார்க்க பெண்கள்விரும்புவதில்லை என்று பெரும்பாலானோர் பதிலளித்துள்ளனர்.இந்த ஆய்வின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் கவர்ச்சி, ஆபாசம், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள்,குத்துப் பாட்டுக்களுக்கு கல்லூரி மாணவ, மாணவியரிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தெரிய வருவதாகதணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.இதை உணர்ந்து கொண்டு படத் தயாரிப்பாளர்கள் நாகரீகமான அளவில் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் தணிக்கைவாரியம் அறிவுரை கூறியுள்ளது.

"ஏ" சர்டிபிகேட் படங்கள் அதிகரிப்பு தமிழ் திரையுலகில் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் "ஏ சான்றிதழ் படங்கள் கிடுகிடுவென அதிகரித்து வருவதாக மத்தியதணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் சீரழிந்து விட்டது, திரையுலகைக் காக்க யாரும் முன்வரவில்லை, டிவியில் புதியபடங்களைப் போடுவதால் திரையுலகம் நசிந்து விட்டது என்று அடிக்கடி தமிழ்த் திரையுலகினர் ஒப்பாரி வைப்பது அதிகரித்துவருகிறது.ஆனால் தமிழ்ப் படங்களின் தரம் தாழ்ந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கலாச்சாரச் சீரழிவுக்குவித்திடும் வகையிலான காட்சிகள் அடங்கிய படங்கள்தான் தற்போது அதிக அளவில் கோலிவுட்டில் தயாராவதாக மத்திய தணிக்கை வாரியம் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.1998ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் 72 சதவீத படங்கள் "யு சான்றிதழ் பெற்ற அதாவது, அனைவரும் பார்க்கத் தகுந்தபடங்களாக வெளியாகின. ஆனால் 2004ல் வெளியான 62 சதவீத படங்கள் "ஏ சான்றிதழ் அதாவது வயது வந்தோர் மட்டும்பார்க்கக் கூடிய படங்களாக அமைந்துள்ளன.சென்னை நகரில் உள்ள 50 கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மத்திய தணிக்கை வாரியம், தமிழ்த் திரைப்படங்களில் வன்முறைமற்றும் ஆபாசக் காட்சிகள் குறித்த கருத்துக் கணிப்பையும் மேற்கொண்டது. இதன் முடிவுகளின் பிரதியை தென்னிந்திய திரைப்படவர்த்தக சபைக்கும் தணிக்கை வாரியம் அனுப்பி வைத்துள்ளது.ஈவ் டீசிங், பாலியல் பலாத்காரம் போன்ற சமூகக் கேடுகளுக்கு, தமிழ்த் திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகள், பாலியல்உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள்தான் காரணம் என்று பெரும்பாலான மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.போஸ்டர்கள், கட் அவுட்டுகள் போன்றவற்றினாலும் பாலுணர்வு தூண்டப்படுவதாகவும் கணிசமான எண்ணிக்கையிலானமாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வின் அடிப்படையில் புதிதாக 11 கட்டுப்பாடுகளை தணிக்கை வாரியம் அமல்படுத்தவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 11 கட்டுப்பாடுகள்:பெண்ணின் மார்புகளை மிக நெருக்கமாக காட்டும் காட்சிகள், மார்பு பிளவுகளை காட்டும் காட்சிகள், மார்புகளை உரசுவதுபோன்ற காட்சிகள், ஓடும்போதோ அல்லது நடனமாடும்போதோ மார்புகள் குலுங்குவது போன்ற காட்சிகள், நீச்சலடிக்கும்போது மார்புகள் அசைவதை காட்டும் காட்சிகள், தொப்புளை மிக நெருக்கமாக காட்டுவது, உதட்டுடன் உதடுகளைவைத்து கிஸ் அடிப்பது (கமலுக்குத்தான் கஷ்டம்!), நடனமாடும்போது இடுப்பை மிக நெருக்கமாக காட்டுவது, ஆணும், பெண்ணும் கட்டிப் புரண்டு ஆடுவது, பாடுவது, பெண்ணின் பின்புறத்தை மிக நெருக்கமாக காட்டுவது, மிக சிறியடிரவுசரை பெண்கள் அணிவது போன்ற காட்சிகள் இனிமேல் படங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது.இந்தக் காட்சிகள் இல்லாமல் இனிமேல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். இதில் ஏதாவது ஒரு காட்சி இடம் பெற்றால் கூடஅந்தப் படத்திற்கு "ஏ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.அதேசமயம், படங்களில் காட்டப்படுவதைப் போல, கல்லூரி மாணவர்கள் நடைமுறையில் மிக மோசமானவர்களாக இல்லைஎன்றும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று கல்லூரி மாணவர்களை மிக மோசமாகசித்தரிக்கும் காட்சிகளை தணிக்கை வாரியம் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் வருவதில் தவறு இல்லை என்றும், நிஜ வாழ்க்கையில் சிகரெட் சர்வசாதாரணமாக புழங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ள மாணவர்கள், மது அருந்தும் காட்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்என்றும் கோரியுள்ளனர்.அதேபோல, கதாநாயகிகள் பெரும்பாலோர் மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வருவதாகவும் பெரும்பாலான மாணவ,மாணவியர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மாணவிகளில் 45 சதவீதம் பேர் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும், 90 சதவீதம் பேர் பெண்கள் புகை பிடிப்பதுபோன்ற காட்சிகளை காட்டக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.குடும்பக் கதைகளைக் கொண்ட படங்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு தருவதில்லை என்ற கேள்விக்கு, இதுபோன்ற கதையம்சம்கொண்ட தொலைக்காட்சித் தொடர்கள் நிறையவே டிவிகளில் வருவதால் செலவு செய்து தியேட்டருக்குச் சென்று பார்க்க பெண்கள்விரும்புவதில்லை என்று பெரும்பாலானோர் பதிலளித்துள்ளனர்.இந்த ஆய்வின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் கவர்ச்சி, ஆபாசம், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள்,குத்துப் பாட்டுக்களுக்கு கல்லூரி மாணவ, மாணவியரிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தெரிய வருவதாகதணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.இதை உணர்ந்து கொண்டு படத் தயாரிப்பாளர்கள் நாகரீகமான அளவில் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் தணிக்கைவாரியம் அறிவுரை கூறியுள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகில் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் "ஏ சான்றிதழ் படங்கள் கிடுகிடுவென அதிகரித்து வருவதாக மத்தியதணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் சீரழிந்து விட்டது, திரையுலகைக் காக்க யாரும் முன்வரவில்லை, டிவியில் புதியபடங்களைப் போடுவதால் திரையுலகம் நசிந்து விட்டது என்று அடிக்கடி தமிழ்த் திரையுலகினர் ஒப்பாரி வைப்பது அதிகரித்துவருகிறது.

ஆனால் தமிழ்ப் படங்களின் தரம் தாழ்ந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கலாச்சாரச் சீரழிவுக்குவித்திடும் வகையிலான காட்சிகள் அடங்கிய படங்கள்தான்

தற்போது அதிக அளவில் கோலிவுட்டில் தயாராவதாக மத்திய தணிக்கை வாரியம் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

1998ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் 72 சதவீத படங்கள் "யு சான்றிதழ் பெற்ற அதாவது, அனைவரும் பார்க்கத் தகுந்தபடங்களாக வெளியாகின. ஆனால் 2004ல் வெளியான 62 சதவீத படங்கள் "ஏ சான்றிதழ் அதாவது வயது வந்தோர் மட்டும்பார்க்கக் கூடிய படங்களாக அமைந்துள்ளன.

சென்னை நகரில் உள்ள 50 கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மத்திய தணிக்கை வாரியம், தமிழ்த் திரைப்படங்களில் வன்முறைமற்றும் ஆபாசக் காட்சிகள் குறித்த கருத்துக் கணிப்பையும் மேற்கொண்டது. இதன் முடிவுகளின் பிரதியை தென்னிந்திய திரைப்படவர்த்தக சபைக்கும் தணிக்கை வாரியம் அனுப்பி வைத்துள்ளது.


ஈவ் டீசிங், பாலியல் பலாத்காரம் போன்ற சமூகக் கேடுகளுக்கு, தமிழ்த் திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகள், பாலியல்உணர்வுகளைத் தூண்டும் பாடல்கள்தான் காரணம் என்று பெரும்பாலான மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போஸ்டர்கள், கட் அவுட்டுகள் போன்றவற்றினாலும் பாலுணர்வு தூண்டப்படுவதாகவும் கணிசமான எண்ணிக்கையிலானமாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் புதிதாக 11 கட்டுப்பாடுகளை தணிக்கை வாரியம் அமல்படுத்தவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 11 கட்டுப்பாடுகள்:

பெண்ணின் மார்புகளை மிக நெருக்கமாக காட்டும் காட்சிகள், மார்பு பிளவுகளை காட்டும் காட்சிகள், மார்புகளை உரசுவதுபோன்ற காட்சிகள், ஓடும்போதோ அல்லது நடனமாடும்போதோ மார்புகள் குலுங்குவது போன்ற காட்சிகள்,

நீச்சலடிக்கும்போது மார்புகள் அசைவதை காட்டும் காட்சிகள், தொப்புளை மிக நெருக்கமாக காட்டுவது, உதட்டுடன் உதடுகளைவைத்து கிஸ் அடிப்பது (கமலுக்குத்தான் கஷ்டம்!), நடனமாடும்போது இடுப்பை மிக நெருக்கமாக காட்டுவது,

ஆணும், பெண்ணும் கட்டிப் புரண்டு ஆடுவது, பாடுவது, பெண்ணின் பின்புறத்தை மிக நெருக்கமாக காட்டுவது, மிக சிறியடிரவுசரை பெண்கள் அணிவது போன்ற காட்சிகள் இனிமேல் படங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது.

இந்தக் காட்சிகள் இல்லாமல் இனிமேல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். இதில் ஏதாவது ஒரு காட்சி இடம் பெற்றால் கூடஅந்தப் படத்திற்கு "ஏ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், படங்களில் காட்டப்படுவதைப் போல, கல்லூரி மாணவர்கள் நடைமுறையில் மிக மோசமானவர்களாக இல்லைஎன்றும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று கல்லூரி மாணவர்களை மிக மோசமாகசித்தரிக்கும் காட்சிகளை தணிக்கை வாரியம் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் வருவதில் தவறு இல்லை என்றும், நிஜ வாழ்க்கையில் சிகரெட் சர்வசாதாரணமாக புழங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ள மாணவர்கள், மது அருந்தும் காட்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்என்றும் கோரியுள்ளனர்.

அதேபோல, கதாநாயகிகள் பெரும்பாலோர் மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வருவதாகவும் பெரும்பாலான மாணவ,மாணவியர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மாணவிகளில் 45 சதவீதம் பேர் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும், 90 சதவீதம் பேர் பெண்கள் புகை பிடிப்பதுபோன்ற காட்சிகளை காட்டக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

குடும்பக் கதைகளைக் கொண்ட படங்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு தருவதில்லை என்ற கேள்விக்கு, இதுபோன்ற கதையம்சம்கொண்ட தொலைக்காட்சித் தொடர்கள் நிறையவே டிவிகளில் வருவதால் செலவு செய்து தியேட்டருக்குச் சென்று பார்க்க பெண்கள்விரும்புவதில்லை என்று பெரும்பாலானோர் பதிலளித்துள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் கவர்ச்சி, ஆபாசம், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள்,குத்துப் பாட்டுக்களுக்கு கல்லூரி மாணவ, மாணவியரிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தெரிய வருவதாகதணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

இதை உணர்ந்து கொண்டு படத் தயாரிப்பாளர்கள் நாகரீகமான அளவில் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் தணிக்கைவாரியம் அறிவுரை கூறியுள்ளது.

Read more about: a certificate films increase

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil