»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்குத் தயாரான படங்களிலேயே மிக அதிகமான செலவில் எடுக்கப்பட்டு, அதிகமான விலைக்குவிற்கப்பட்டுள்ள படம் சண்டியர் தான்.

கமலின் சம்பளத்தைச் சேர்க்காமல் ரூ. 7 கோடி செலவில் தயாராகியுள்ளஇந்தப் படம் ரூ. 11 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

சென்னை ஏரியா வினியோகத்தை கமல் தன் வசமே வைத்துக் கொண்டுவிட்டார். இதன் விலை ரூ. 1 கோடி.

மொத்தத்தில் இந்தப் படத்தின் மூலம் ரூ. 4 கோடி வரை பணம் பார்த்துள்ளார் கமல் என்கிறார்கள். இது தவிரசென்னையில் கிடைக்கும் வசூலும் கமலுக்கே.

இதற்கு அடுத்தபடியாக அதிக விலைக்குப் போயுள்ள படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். இந்தப் படம் ரூ. 6கோடிக்கும் அதிகமாக விலைபோயுள்ளது.

இவரது முந்தைய படங்களான காதல் கொண்டேன் மற்றும் திருடா திருடி மூலம் தயாரிப்பாளர்கள்,வினியோகஸ்தர்கள் ஈட்டிய பணம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 27 கோடி.

இதனால் தனுஷை வைத்து எவ்வளவுவேண்டுமானாலும் செலவு செய்ய முட்டி மோதுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதையடுத்து அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படம் விஜய்காந்தின் எங்கள் அண்ணா. விஜய்காந்தே ரூ. 6கோடியில் தயாரித்த இந்தப் படமும் ரூ. 1 கோடி லாபம் வைக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. தயாரிப்பு செலவில்விஜய்காந்தின் சம்பளமும் அடக்கம். இதனால் கேப்டனுக்கு சுளையாக ரூ. 3 கோடி வரை நிற்குமாம்.

அடுத்தது சிலம்பரசனின் கோவில். இந்தப் படமும் ரூ. 5 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ. 2 கோடி வரை லாபம்வைத்து விற்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் நடித்த ஜெய் படத்தை தயாரித்தது அவரது அப்பா. பிரசாந்தின் சம்பளத்தையும் சேர்த்து மொத்த செலவுரூ. 4 கோடி. இது ரூ. 5 கோடி வரை வினியோகஸ்தர்களிடம் விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈசியாக ரூ. 2.5கோடி வரை தியாகராஜனுக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.

இது தவிர படங்கள் ஓடுவதைப் பொறுத்து வினியோகஸ்தர்களும் ஈட்டுவார்கள். மொத்தில் இந்தப் பொங்கல்படங்களில் மட்டும் தமிழ் சினிமாவால் செய்யப்பட்ட முதலீடு ரூ. 30 கோடியைத் தாண்டுமாம்.

பொங்கல் போட்டி கடுமையாக இருப்பதாலும், நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாலும் தனதுஆட்டோகிராப் படத்தின் ரிலீஸை சில வாரங்களுக்கு தள்ளி வைத்துவிட்டார் இயக்குனர் சேரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil