»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸாரி எனக்குக் கல்யாணம் ஆயிருச்சு படத்தில் ஸ்வர்ணமால்யா தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்வர்ணாமால்யாவும் புளோராவும் போட்டி போட்டுக் கொண்டு கலக்கி வருகின்றனர்.

கஜேந்திராவில் லயாவா, புளோராவா என்ற போட்டியில் லயாவை ஜகா வாங்க வைத்தார் புளோரா. மலையாளியான புளோராவின்சொந்தப் பெயர் ஆஷா ஷைனி. பிறந்து வளர்ந்தது டெல்லியில். 1999ம் ஆண்டில் மிஸ் டெல்லி பட்டத்தை வென்றதோடு கலைச் சேவைசெய்ய ஆசை பிறந்துவிட மும்பைக்கு வந்து சேர்ந்தார்.

அங்குள்ள மாடல் உலக சேட்டன்களைப் பிடித்து வாய்ப்புக்களைக் கைப்பற்றினார். அப்படியே தமிழிலும் இவருக்கு சேட்டன்கள் தான்வாய்ப்புப் பிடித்துத் தந்தனர்.

ஆஷா என்ற தன் கேரளத்துப் பெயரை புளோராவாக மாற்றிக் கொண்டு நடித்தார். படம் ஊத்திக் கொண்டது.

ஆனாலும் புளோராவின் திறமைக்கு குஸ்தி என்ற படம் கிடைத்தது. இதில் பிரபு, கார்த்திக் உடன் நடிக்கிறார் புளோரா. ஏகப்பட்ட நீச்சல்உடைக் காட்சிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார். கார்த்திக்கும் பிரபுவும் போட்டி போட்டுக் கொண்டு புளோராவுக்கு நிறையவே நடிப்புகற்றுக் கொடுத்தார்கள்.

ஆனால், தயாரிப்பாளரிடம் தான் பணமில்லாமல் போய்விட்டது. இதனால் சூட்டிங் நொண்டியடிக்க ஆரம்பித்துவிட்டது.

இந் நிலையில் தீபாவளி சீசன் வந்துவிட, பட்டுச் சேலை விளம்பரங்களில் நடிக்க ஜவுளிக் கடை அதிபர்கள் தங்கப் பற்களுடன்நடிகைகளுக்கு வலை வீச ஆரம்பித்தனர்.

டிவி விளம்பரப் படங்களை இயக்கி வருவது பெரும்பாலும் ராஜிவ் மேனன் போன்ற மலையாள இயக்குனர்கள் தான். இதனால் மலையாளிநடிகைகளாகப் பார்த்தே சான்ஸ் கொடுத்தனர். அப்படியாக சில பல வாய்ப்புக்களை மீண்டும் சேட்டன்கள் மூலம் பெற்றார் புளோரா.


இதைத் தொடர்ந்து சும்மா இருந்த புளோரா, எடுத்துவிட்டார் தனது மும்பை ஸ்டைல் ஸ்டில்களை. கோடம்பாக்கத்தை இவரது அதிரடி ஸ்டில்ஆல்பங்கள் வலம் வந்தன. அதன் விளைவாகக் கிடைத்தது தான் ஸாரி.. எனக்கு கல்யாணம் ஆயிருச்சு படம்.

இதில் ஸ்வர்ணமால்யாவுடன் நீங்க போட்டி என்றபோது, லயாவுக்கே அல்வா கொடுத்த நான் சின்னப் பொண்ணுஸ்வர்ணமால்யாவையெல்லாம் ஓட வைப்பேன் என்று சொல்லித் தான் அட்வான்ஸ் வாங்கினார்.

ஆனால், ஸ்வர்ணாவின் இளமை புதுமையான முறையில் வெளியாகி கலக்க புளோராவே கதிகலங்கிவிட்டார்.

விளைவு.. எக்ஸ்ட்ரீம் லெவலுக்குப் போனார் புளோரா. ஹீரோ ஸ்ரீமானும் ஸ்வர்ணமால்யாவும் துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் அளவுக்கு இருந்ததாம் புளோராவின் கலக்கல்.


இந்த நிலையில் தான் சிக்கல் வந்தது. ஸ்வணர்மால்யாவுக்கு காஞ்சி மடத்தின் உருவத்தில் போலீஸ் டார்ச்சர் ஆரம்பமாகிவிட,கலங்கிவிட்டதாம் பட யூனிட். போலீஸ் விவகாரத்தால் ஸ்வர்ணமால்யா தொடர்ந்து நடிக்க முடியுமோ இல்லையோ என்ற சந்தேகம்வந்துவிட்டதாம்.

இதனால் அவரை மெதுவாகக் கழற்றிவிட்டுவிடலாமா என்று யோசிக்கிறார்களாம்.

புளோராவும் ஸ்வர்ணமால்யாவும் காட்டு கவர்ச்சி போதாது என்று இந்தப் படத்தில் ஷகீலாவுக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கிறார்இயக்குனர் சாகர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil