»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாரி, எனக்கு கல்யாணம் ஆயிருச்சு...ஆனாலும் பரவாயில்லை!

என்னையா தலைப்பு இது.. ?என்கிறீர்களா..

ஹலோ.. இது படத்தோட தலைப்புங்க. (விட்டால், இதையே கூட தலைப்பாக வைப்பார்கள்)

சாரி, எனக்கு கல்யாணம் ஆயிருச்சு, ஆனாலும் பரவாயில்லை... என்ற இந்த வித்தியாசமான நாமகரணம் கொண்ட படத்தில்நடிப்பது புளோரா, சொர்ணமால்யா மற்றும் ஸ்ரீமான் ஆகியோர்.

தாராளமய கொள்கையில் பல நாடுகளையே தூக்கி சாப்பிடும் புளோரா இந்தப் படத்தில் கவர்ச்சியில் மோட்சத்தையேஅடைந்துவிட்டதாகத் தெரிகிறது. கஜேந்திராவில் விஜய்காந்தின் இரு பக்கமும் நின்ற (நடித்த அல்ல..) ஒரு ஹீரோயின் தான்புளோரா. (இன்னொருவர் லயா).

படத்தில் லயாவுக்கும், புளோராவுக்கும் எந்த வேலையும் கொடுக்கவில்லை இயக்குனர். ஆனாலும் கேப்டன் மாதிரி வெயிட்டானஆளுக்கு படத்தில் உண்மையிலேயே வெயிட்டான இரண்டு ஹீரோயின்கள் இருப்பது தானே சாஸ்திரம்.

அந்த வகையில் கஜேந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இந்த மும்பை பெண் புளோரா. 1999ம் ஆண்டில் டெல்லியில்நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் டெல்லி பட்டம் வெற்றவர்.

கேப்டனை சந்தித்து தனது நடிப்புத் திறமையைக் காட்டி, கஜேந்திரா வாய்ப்பைப் பெற்றவர். முதல் படத்தில் மூத்தவரானவிஜய்காந்தோடு நடித்தால், அடுத்து ஏதாவது இளம் ஹீரோவுடன் ஜோடி போட சான்ஸ் வருகிறதா என்று காத்திருந்தார்.

சான்சும் வந்தது. ஆனால், முன்னாள் இளம் நடிகர் கார்த்திக்குடன் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

குஸ்தி என்ற அந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கஜேந்திராவை விட நாலு படி மேலேயேஏறிப் போய் கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், கார்த்திக் வந்தால் தானே சூட்டிங் நடத்துவது. நம் ஊர் மழை மாதிரி அவர் சொன்ன தேதியில் வரவே மாட்டார் என்பதுஉலகறிந்தது தானே. கார்த்திக்கின் தாறுமாறு பிகேவியரால் சூட்டிங் நின்று நின்று நடக்க, அடுத்த வாய்ப்புக்களைத் தேடி ஒருரவுண்டு கிளம்பினார் புளோரா.

அவரது முயற்சிகள் பலனளித்தன. சான்ஸ் தேடி வந்தபோதே புளோரா காட்டிய தரிசனத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தனர்தயாரிப்பாளர்கள். சிலர் உறுதிமொழிகள் தந்து அனுப்பினர்.

அதில் ஒருவர் உன்னிடத்தில் என்ற படத்தில் புளோராவை புக் செய்து கையில் பெரும் தொகையை கையில் கொடுத்துஅனுப்பினார்.

ஆனால், சூட்டிங் தொடங்கியபோது எல்லோரும் காத்திருக்க புளோரா மட்டும் வரவில்லை. தேடிப் பார்த்தால் மும்பையில் ஏதோதிடீர் கமிட்மெண்ட்டாம். கிளம்பிப் போய்விட்டார். வெறுத்துப் போன அந்த புரோடியூசர், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிபுளோராவுக்கு ரெட் கார்ட் போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இந் நிலையில் தீபாவளி சீசன் வந்துவிட, சினிமாவில் தலைகாட்டிய அனைவருக்கும் டிவியில் பட்டுச் சேலை விளம்பரங்களில்நடிக்க வாய்ப்பு வந்தது. புளேராவுக்கும் அப்படி பல வாய்ப்புக்கள். பல நிறுவன சேலைகளைக் கட்டி காட்சி தந்ததில் நல்லவரும்படி.

அந்த வருமானம் தீபாவளியோடு முடிந்துவிட்ட நிலையில், நாம் முதல் பாராவில் சொன்ன சாரி... எனக்கு கல்யாணம் ஆயிருச்சுஎன்ற படத்தில் நடிக்க பெரிய தொகையை கையில் வாங்கியிருக்கிறார் புளோரா.

வாங்கிய தொகைக்கு வஞ்சனை செய்யாமல் தனது பேரழகை காமிரா முன் கட்டவிழ்த்து விட்டிருக்கிறாராம் புளோரா. படத்தில்காட்டுத்தனமான கவர்ச்சி காட்டி கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக புக் செய்யப்பட்ட இளமை புதுமை ஸ்வர்ணமால்யா. கணவருடன் பைட், விவாகரத்து,புளு பிலிம் சிடி புரளி என பரபரப்பாக இருக்கும் ஸ்வர்ணமால்யா தேடி அலைந்து பிடித்த சான்ஸ் இது.

வாய்ப்பு தரும்போதே, இது உனக்கு சரியா வராதேம்மா.. படத்தில் கவர்ச்சியே பிரதானம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில்சொல்லப்பட, சான்ஸ் குடுங்க.. அப்புறம் பாருங்க என் கலக்கலை என்று உறுதி தந்தாராம்.

சொன்னபடியே, புளோராவே கதி கலங்கும் அளவுக்கு தனது இளமையை இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக எடுத்துக்காட்டி வருகிறார் ஸ்வர்ணமால்யா.

ஸ்டில் செஷனை நடத்திவிட்டு படத்தின் பூஜையை நடத்தினார்கள். அதில் வெளியிடப்பட்ட ஸ்டில்ஸ் தான் இவை. படத்திலும்இப்படியோ தான் நடிக்கப் போகிறார்களாம்.

இதுவரை சைட் ரோல்களில் வந்து போய்க் கொண்டிருந்த ஸ்ரீமான் தான் ஹீரோ. குடுத்து வச்ச புள்ள...

ஏவிம் ஸ்டுடியோவில் நடந்த படப் பூஜையில் பாலசந்தர், விக்ரம், சத்யராஜ் உள்ளிட்ட திரையுலக முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil