»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மின்சாரக் கனவு - ஊத்திக் கொண்டது. கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்... - இது எப்படி இருக்கப் போகுதோ என சந்தேகமாய் கேட்டவர்களின்விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைத்தது.

ஒளிப்பதிவாளராக இருந்த ராஜீவ் மேனன், இயக்குநராகி இயக்கிய முதல் படம் மின்சாரக் கனவு. இந்தியில் சப்னே. பெரிய அளவில் ஓடவில்லை. அதன்பிறகு அவரையும் காணவில்லை. பின்னர் பிரமாண்ட படங்களை எடுத்துப் பிரபலமான கலைப்புலி தாணுவின் படத்தை ராஜீவ் இயக்குவதாக தகவல் வந்தது.

அனைவரும் எதிர்பார்த்ததுபோல கலைப்புலி தாணு, பெரிய அளவில் செலவு செய்தார். மம்முட்டி, அஜீத், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு என நட்சத்திரங்கள் அணிவகுத்திருந்த இந்தப் படம் நன்றாக ஓடி ராஜீவ் மேனன் குறித்து கொஞ்சம் பேச வைத்தது.

மும்பையிலும் ஆங்கில சப் டைட்டிலுடன் ஓடி வசூலில் சாதனை படைத்தது. தபு, ஐஸ்வர்யாவுமே இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தாலும் கூட ஒரு தமிழ்ப்படம் மும்பையில் அதே மொழியில் ஓடியது, அதிலும் வெற்றிப்படமாக ஓடியது இதுவே முதல் முறை.

லண்டன் திரைப்பட விழாவுக்கும் கூட கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தேர்வு செய்யப்பட்டது.

படம் நன்றாக ஓடியபோதும் வீட்டை விற்றுவிட்டு, ரூ. 50 லட்சம் கடனாளியாகிவிட்டார் அதன் தயாரிப்பாளர் தாணு.

ஆனால், இதன் இயக்குனர் ராஜீவ் மேனனோ, இரண்டு வருடமாக இந்தப் படத்திற்காக உழைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் தாணு, சம்பளம்தரவில்லை என்று சமீபத்தில் மும்பை பத்திரிகையொன்றில் புலம்பியிருக்கிறார்.

என்ன தான் நடந்தது?

சமீபத்தில் தாணு அளித்த பேட்டி பல அதிர்ச்சிகரமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.

க.கொ.க.கொ. தயாரிப்பின்போது, ராஜீவ் மேனன் செய்த பல குழப்பங்களை தாணு தனது குமுறலில் கூறியுள்ளார். கலைப்புலி தாணுவும், ராஜீவ்மேனனும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, படத்தினால் கிடைக்கும் லாபத்தில் 40 சதவீதம் தாணுவுக்கும், 60 சதவீதம் ராஜீவுக்கும் உரியதாகும்.ஆனால் படத் தயாரிப்பின் பாதியிலேயே கூடுதலாக பங்கு கேட்டு ராஜீவ் மேனன் தகராறு செய்தார். இதனால் தனக்குப் பெரும் பண நஷ்டம்ஏற்பட்டதாக கூறுகிறார் தாணு.

தாணு கூற்றுப்படி, ஒரு படத்தின் சென்னை வினியோக உரிமை, வழக்கமாக ரூ. 1 கோடிக்கு விற்கும். ஆனால் ராஜீவ் மேனன், க.கொ.க.கொ.படத்தை ரூ. 35 லட்சத்திற்கு மட்டுமே வாங்கினார். இதேபோல, வெளிநாட்டு உரிமையும் ரூ. 25 லட்சம் கொடுத்து அடிமாட்டு விலைக்கு வாங்கினார்.ஆனால் அதை ரூ. 1 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ. 25 லட்சம் சுங்கவரியும் கூட மிச்சமானது. இது தனக்குஇழைக்கப்பட்ட பச்சைத் துரோகம் என்கிறார் தாணு.

இந்தப் படத்தை சிறப்பாக எடுப்பதற்காக பணத்தை தண்ணீராக செலவழித்தேன். இதற்காக சென்னையில் இருந்த ஒரு பங்களாவைக் கூட விற்றேன். ஆனால்,ராஜீவ் மேனன், என்னிடமிருந்து சுருட்டிய பணத்தில் ஒரு லேட்டஸ்ட் கேமரா, எடிட்டிங் கருவிகள், அடையாறில் ஒரு பங்களா என சொத்துக்கள் வாங்கிக்குவித்துள்ளார்.

எனது பணத்தில் அவர் வசதிகளை சேர்த்துக் கொண்டார். ஆனால் நானோ, வாங்கிய ரூ. 50 லட்சம் கடனுக்காக வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன்என்கிறார் தாணு.

இதுதவிர வேறு விதமான செலவுகளையும் படத் தயாரிப்புடன் சேர்த்துள்ளார் ராஜீவ் மேனன் என்கிறார் தாணு. ஐஸ்வர்யா ராயின் ஆடைகளுக்கு மட்டும் ரூ.7 லட்சம் செலவானதாக கூறியுள்ளார் ராஜீவ் மேனன். அதே போல, தபுவுக்கு ரூ. 10 லட்சம் கொடுப்பதாக ஒப்பந்தம். ஆனால் அவருக்கு ரூ. 15லட்சம் கொடுக்குமாறு கூறியுள்ளார் ராஜீவ் மேனன். தபுவிடம் தனியாக இதுதொடர்பாக உறுதியளித்திருந்தாராம் ராஜீவ் மேனன்.

கலைப்புலியின் புகார்களை மறுக்கிறார் ராஜீவ் மேனன். படத்தின் டி.வி. உரிமையை தாணு ரூ. 27 லட்சத்திற்கு விற்றதாகவும் அந்தப் பணத்தை அவரேஎடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனாலும் இந்தப் பணத்தினால் மட்டும் தாணு அடைந்த இழப்பீட்டை சரி செய்து விட முடியாது என்று தெரிகிறது.

இந்தத் தொந்தரவு போதாது என்று படம் ரிலீஸ் செய்ய சில நாட்களே உள்ள நிலையில், சில காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ராஜீவ் மேனன். இதனால் பட வெளியீடு தள்ளிப் போனது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் அப்செட் ஆகியுள்ளார் தாணு. இதன் காரணமாகவே,சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடந்த பட வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ராஜீவ் மேனனின் நடத்தையைக் காட்டும் விதத்தில் இரண்டு புகைப்படங்களைக் காட்டுகிறார் தாணு. ஒரு படத்தில்ஐஸ்வர்யா, தபுவுடன் குளம் ஒன்றில் ராஜீவ் மேனன் குளிப்பது போல் உள்ளது.

மற்றொரு படத்தில் சென்னை டிஸ்கோ அரங்கு ஒன்றில் பாடகி வசுந்தரா தாஸுடன், ராஜீவ் மேனன் நடனமாடுவது போல உள்ளது. ஆனால் இதைராஜீவ் மேனன் மறுக்கிறார். குளிக்கும் போட்டோ போலியானது, டிஸ்கோத்தேக்கு போவதில் என்ன தப்பு என்கிறார் ராஜீவ் மேனன்.

அவரது பணத்தில் டிஸ்கோத்தெக்கு போயிருந்தால் பரவாயில்லை, இதையும் எனத் படத் தயாரிப்பு செலவில் சேர்த்துவிட்டார் என்கிறார் தாணு கடுப்பாக.

ராஜீவ் மேனன் மீது தாணுவ கூறும் இன்னொரு புகார் அவர் ஒரு தமிழ் வெறுப்பாளர் என்பது. படத்தில், இந்திய அமைதி காக்கும் படையைகேவலப்படுத்தும் விதத்தில் காட்சி அமைத்தார் என்பது தாணுவின் புகார். கார்கில் போருடன் அதை ஒப்புமைப்படுத்தும் விதத்திலும் அதை அமைத்தார்என்பது தாணுவின் குற்றச்சாட்டு.

ஆனால் ராஜீவ் மேனன் இதை மறுக்கிறார். தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அக்காட்சி சேர்க்கப்படவில்லை என்கிறார். ஒரு வீரரின்கோபத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதத்திலேயே இந்தக் காட்சி சேர்க்கப்பட்டது என்கிறார் ராஜீவ் மேனன்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே கூட ராஜீவ் மேனன் குறித்து பல புகார்கள் வெளியாயின. தனது உதவியாளர்களிடம் அவர் நடந்து கொண்டவிதமும், அதனால் கோபமடைந்து அவர்களில் சிலர் வெளியேறி விட்டதாகவும் செய்திகள் வந்தன. தமிழர்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகாரணமாக இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

க.கொ.க.கொ. வர்த்தக ரீதியில் நல்ல லாபத்தைக் கொடுத்திருந்தாலும் கூட அந்தப் படத்தினால் தாணுவுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாககூறப்படுகிறது. தாணு போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் கூட சில நேரம் "ரோந்தில் விடப்படுவார்கள் என்பதை ராஜீவ் மேனன் விவகாரம்நிரூபித்துள்ளது.

இந்த சர்ச்சைகளால் ராஜீவ் மேனனுக்குத் தீராத அவப் பெயர் உண்டாகி விட்டது மட்டும் உண்மை.

Read more about: movies rajiv menon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil