twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ளிக்கிழமை... இன்றைய ரிலீஸ் ஏதாவது தேறுமா?

    By Shankar
    |

    இன்று வெள்ளிக்கிழமை... தமிழக தியேட்டர்களுக்கு திருவிழா நாள். இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாகின்றன.

    பாரதிராஜாவின் அன்னக்கொடி, வின்சென்ட் செல்வா இயக்கிய துள்ளி விளையாடு மற்றும் தனுஷின் மொழிமாற்றுப் படமான அம்பிகாபதி ஆகியவைதான் இந்த வெள்ளிக் கிழமை ஸ்பெஷல்.

    அன்னக்கொடி

    அன்னக்கொடி

    இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் பாரதிராஜா சர்ச்சை நாயகனாக மாறிவருவதால், இந்தப் படம் குறித்து பலருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதே உண்மை. இவற்றையெல்லாம் மீறி படம் ரசிகர்களைக் கவர வேண்டும்.

    துள்ளி விளையாடு

    துள்ளி விளையாடு

    விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் என இரண்டு வெற்றிப் படங்கள் தந்த வின்சென்ட் செல்வாவின் படம் இது. புதுமுகங்களுடன் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். வின்சென்ட் செல்வா பெரிதும் நம்பியுள்ளார், தனது அடுத்த இன்னிங்ஸுக்கு.

    அம்பிகாபதி

    அம்பிகாபதி

    இந்தியில் வெளியான தனுஷ் - சோனம் கபூரின் ராஞ்ஜனாவின் தமிழாக்கம்தான் இந்த அம்பிகாபதி. இந்தியில் படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. அதே வெற்றி இங்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அம்பிகாபதியை அதிக அரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.

    மற்ற படங்கள்...

    மற்ற படங்கள்...

    வித்யா பாலன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்திப்படம் காஞ்சக்கார், ஹாலிவுட் படம் ஹம்மிங் பர்ட், தி ஹீட் ஆகிய படங்களும் இன்று வெளியாகியுன்றன.

    ஸ்ருதி ஹாஸன் தெலுங்குப் படம்

    ஸ்ருதி ஹாஸன் தெலுங்குப் படம்

    ஸ்ருதிஹாஸன் - ரவிதேஜா நடித்த தெலுங்குப் படம் பலுபு அதிகபட்சமாக 25 அரங்குகளில் இன்று வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்களைவிட இது அதிகம். மலையாளப் படமான 5 சுந்தரிகளும் இன்று சென்னையில் வெளியாகியுள்ளது.

    English summary
    There are two original Tamil releases, Bharathiraja's Annakodi which carries an UA certificate and Vincent Selva's Thulli Vilayadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X