»   »  சத்ரியன், ரங்கூன், தி மம்மி... இன்றைய ஸ்பெஷல்!

சத்ரியன், ரங்கூன், தி மம்மி... இன்றைய ஸ்பெஷல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை 2 நேரடி தமிழ்ப் படங்களும், ஒரு ஹாலிவுட் படமும் தமிழகத்தில் வெளியாகியுள்ளன.

அவை சத்ரியன், ரங்கூன், தி மம்மி ஆகியவை.

பாகுபலி படத்தின் தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், இந்தப் படங்கள் ஓரளவு நல்ல எண்ணிக்கையிலான அரங்குகளில் வெளியாகியுள்ளன.

சத்ரியன்

சத்ரியன்

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள படம் சத்ரியன். விக்ரம் பிரபு, மஞ்சிமா நடித்துள்ளனர். சுந்தர பாண்டியனுக்கு இணையான வெற்றியை இந்தப் படம் பெறும் என உறுதியாகக் கூறுகிறார் எஸ் ஆர் பிரபாகரன். தமிழகத்தில் மட்டும் 300 அரங்குகளில் சத்ரியன் வெளியாகியுள்ளது.

ரங்கூன்

ரங்கூன்

கௌதம் கார்த்திக் - சனா நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ரங்கூன். ஃபாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து ஏ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார். பெரிய பேனர், நம்பிக்கையான நட்சத்திரங்கள் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது இந்தப் படத்துக்கு.

தி மம்மி

தி மம்மி

டாம் க்ரூஸ், ரஸ்ஸல் க்ரோ உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடித்துள்ள தி மம்மி, நேரடி தமிழ்ப் படங்களை விட அதிக அரங்குகளில் வெளியாகியுள்ளது.

அன்ட்.... பாகுபலி!

அன்ட்.... பாகுபலி!

யெஸ்... பாகுபலி இன்னும் பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இப்போதும் நாற்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது.

English summary
Today there are 2 direct Tamil movies and a Hollywood movie are releasing in Tamil box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil