»   »  நண்பர்கள் தின ஸ்பெஷல்: கோலிவுட்டின் நண்பேன்டாக்கள் யார், யார்?

நண்பர்கள் தின ஸ்பெஷல்: கோலிவுட்டின் நண்பேன்டாக்கள் யார், யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திரையுலகின் சில நண்பேன்டாக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திரையுலகின் சில நண்பேன்டாக்களை பார்க்கலாம்,

ரஜினி-ராஜ் பகதூர்

ரஜினி-ராஜ் பகதூர்

ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தான் கர்நாடக மாநிலத்தில் பேருந்தில் கண்டக்டராக இருந்தபோது அதன் டிரைவராக இருந்த ராஜ் பகதூருடன் இன்று நட்பாக உள்ளார். பெங்களூர் சென்றால் பகதூரை பார்க்காமல் ஊர் திரும்ப மாட்டார்.

கமல்-ரமேஷ் அரவிந்த்

கமல்-ரமேஷ் அரவிந்த்

உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகர் ரமேஷ் அரவிந்தும் பல காலமாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். ஒருவரின் படத்தில் மற்றொருவர் கவுரவ தோற்றத்தில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அஜீத்-விஜய்

அஜீத்-விஜய்

அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கிறார்கள். ஆனால் அஜீத்தும், விஜய்யும் நண்பர்களாகத் தான் உள்ளனர். இது ரசிகர்களுக்கு தெரிந்தும் மோதல் மட்டும் குறையவில்லை.

ஆர்யா-விஷால்

ஆர்யா-விஷால்

ஆர்யா-விஷால் நட்பு பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இருவருக்கும் இடையே அப்படி ஒரு நெருக்கமான நட்பு. இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா- சந்தானம்

ஆர்யா- சந்தானம்

ஆர்யாவும், சந்தானமும் படத்தில் மட்டும் நண்பேன்டா கிடையாது நிஜத்திலும் தான். ஆர்யாவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் காலை வேளையில் சந்தானத்துடன் சேர்ந்து அவ்வப்போது சைக்கிள் ஓட்டுவார்.

விஷால்-விக்ராந்த்

விஷால்-விக்ராந்த்

விஷாலும், இளைய தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்தும் நெருங்கிய நண்பர்கள். வாடி நின்றபோது கை கொடுத்து தூக்கிவிட்டவன் என் நண்பன் விஷால் என்று விக்ராந்த் பெருமையாக சொல்வது உண்டு.

தனுஷ்- சிம்பு

தனுஷ்- சிம்பு

ஒரு காலத்தில் எதிரும், புதிருமாக இருந்த தனுஷும், சிம்புவும் கூட நண்பேன்டா ஆகிவிட்டனர். முதலில் முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற அவர்கள் தற்போது கை குலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டனர்.

English summary
Above is the list of friends in Kollywood. We remind you of them on friendship day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil