»   »  இப்படியொரு 100-வது நாள் விழா!!

இப்படியொரு 100-வது நாள் விழா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை 600028 படத்தின் 100வது நாள் விழாவை படு வித்தியாசமாக கிரிக்கெட் போட்டிகளுடன் கொண்டாட தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் திட்டமிட்டுள்ளார்.

கல்லி கிரிக்கெட் எனப்படும் தெருவோர கிரிக்கெட் வீரர்களின் கனவுகளை மையமாகக் கொண்டு உருவான படம் சென்னை 600028. பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் தயாரிக்க, கங்கை அமரனின் மகன் பிரபு வெங்கட் இயக்கத்தில் முற்றிலும் புத்தம் புது நடிகர்களின் அசத்தல் நடிப்பில் உருவான இப்படம் பெரும் ஹிட் ஆனது.

படம் தற்போது 100வது நாளை (ஆகஸ்ட் 5) எட்டியுள்ளது. இதையடுத்து நூறாவது நாள் விழாவை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தது சென்னை 600028 படக் குழு.

இதையடுத்து கல்லி கிரிக்கெட் வீரர்கள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தலா 10 ஓவர்களைக் கொண்ட பகல் இரவு கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.

இந்தப் போட்டியில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படும். இந்த கிரிக்கெட் போட்டிக்கு டெக்ஸோன்6060 என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்க 32 அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதில், 15 அணிகள் நிறுவனங்களின் அணிகள். மற்றவை கல்லி கிரிக்கெட் அணிகள். குறிப்பாக ராயபுரம் கிரிக்கெட் வீரர்களும் இதில் அடக்கம்.

காலை 7.30 மணிக்கு போட்டிகள் ெதாடங்கும். அன்று நள்ளிரவு 1 மணி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் அணி, சென்னை 600028 பட கிரிக்கெட் அணியுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மோதும். அதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.

இந்தப் போட்டிகளை ஹலோ எப்.எம். ரேடியோ நேரடியாக வர்னணை செய்யவுள்ளதாம். இப்போட்டியில் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ் ஆகியோரையும் விளையாட வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாம்.

இதுதவிர ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் படக் குழுவினருக்கு செமத்தியான விருந்து மற்றும் பாராட்டு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

கிரிக்கெட் போட்டியைப் பற்றிய படம் என்பதால் இப்படிக் கொண்டாடுகிறார்கள். இதுவே ஜாதிக் கலவரம் பற்றிய படம் என்றால் நிஜமாகவே ஜாதிக் கலவரத்தை உருவாக்கி கொண்டாடுவார்களோ??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil