twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மச்சான் நாசருடன் மல்லுக்கட்டும் வடிவேலு..இனி இப்படி ஒரு படம் வருமா? எம் மகன் 16 ஆண்டு நினைவுகள்

    |

    வடிவேலு, சரண்யா நகைச்சுவையில் கலக்கிய எம் மகன் படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது. வடிவேலு நாசருடன் மல்லுக்கட்டும் காட்சிகள் நகைச்சுவைமிக்கவை.

    சின்னத்திரை இயக்குநர் திருமுருகனின் அழகான திரைக்கதை அதற்கு ஏற்ற நடிகர், நடிகைகள் இயக்கம் ஒரு அருமையான குடும்பப் படமாக எம் மகன் படம் அமைந்தது.

    வடிவேலு நகைச்சுவையுடன் குணச்சித்திரத்தையும் கலந்து கொடுத்து மிக அற்புதமாக நடித்திருப்பார். அவருக்கு பெயர் சொல்லும் படங்களில் எம் மகனும் ஒன்று.

    குடும்ப உறவுகளை பின்னி பிணைந்து சொன்ன ஒரு படம்

    குடும்ப உறவுகளை பின்னி பிணைந்து சொன்ன ஒரு படம்

    குடும்ப உறவுகளை அழகாக அழகா சொன்ன படம் எம் மகன். எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டதற்கு காரணம் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற காரணத்திற்காக எம் மகன் என்று பெயர் மாற்றப்பட்டது. நடிகர் வடிவேலு கதாநாயகனை தாண்டி இப்படத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மன் நீர்மூழ்கிப்பல் இந்தியாவை தாக்க வந்தது அந்த கப்பல் சென்னை கோட்டை அருகே குண்டு வீசியது. அந்த கப்பலுக்கு எம்டன் என்று பெயர். அதன் பெயரைக்கேட்டாலே அன்றைய மதராஸ் மக்கள் அலறினார்கள். உட்பட்ட அந்த கப்பலின் குண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே விழுந்தது ஆனால் வெடிக்கவில்லை. பயத்தை பீதியை கிளப்பிய ஒரு வார்த்தை அதையே தலைப்பாக வைத்து கோபக்கார தந்தைக்கு எம்டன் என்ற அடைமொழியுடன் எம்டன் மகன் என்று எடுக்கப்பட்ட படம் தான் பின்னர் எம் மகன் என்று ஆகியது.

     சின்னத்திரையுடன் வெள்ளித்திரையையும் கலக்கிய திருமுருகன்

    சின்னத்திரையுடன் வெள்ளித்திரையையும் கலக்கிய திருமுருகன்

    சின்னத்திரையில் கால் பதித்து வெற்றிகரமாக பல சீரியல்களை அளித்த திருமுருகன் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களாக நடிகர்களாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். அனைவரும் ரசிக்கும்படியான ஒரு அருமையான குடும்ப படமாக எம்மகன் வந்தது. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி வெளியான இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஒரு கோபக்கார தந்தை தன் மகனை எந்த அளவுக்கு பாடுபடுத்துவார் என்பதை இப்படத்தில் நகைச்சுவை கலந்து சொல்லியிருந்தார்கள். வடிவேலு என்ற கேரக்டர் மட்டும் இல்லாமல் இருந்தால் இப்படம் ஓடி இருக்குமா என்பதே தெரியாது.

    மச்சானுடன் மல்லுக்கட்டும் வடிவேலு

    மச்சானுடன் மல்லுக்கட்டும் வடிவேலு

    கோபக்கார தந்தையாக நாசரும், அவருக்கு அடங்கிய பயந்த பிள்ளையாக பரத்தும், தாயாக தந்தையையும் அனுசரித்து மகன் மீதும் பாசம் வைத்து தன் தாய் வீட்டார் மீதும் பாசம் வைத்து அனைவர் மத்தியிலும் தடுமாறும் தாயாக சரண்யா வாழ்ந்திருந்தார். இது தவிர மற்ற கேரக்டர்களும் உண்டு. கொடூரமான, கோபக்கார, தேவையற்ற ஈகோ பிடித்து அலையும் தந்தையாக நாசர் நடித்திருப்பார். மளிகை கடை வைத்திருக்கும் நாசர், அவரது மனைவி சரண்யா, மகன் பரத், மகள் என சிறிய குடும்பம். அக்காவுடன் அதே வீட்டில் தங்கி இருக்கும் தம்பியாக வடிவேலு. அவர் அங்கேயே தங்கி கொண்டு மச்சானின் மளிகை கடையும் பார்த்துக் கொண்டு மச்சானின் மகன் பரத்துடன் பாசத்துடன் பழகி வரும் கேரக்டர். வடிவேலுக்கு அடிக்கடி மச்சானைக் கலாய்த்துக்கொண்டு தன்னுடைய நிலையையும் காமெடியாக பேசிக்கலாய்க்கும் பாத்திரம். உணர்ந்து செய்திருப்பார்.

    சாப்பிடும் தட்டை தட்டிவிட்டு வடிவேலுவௌ புலம்பவைக்கும் பரத்

    சாப்பிடும் தட்டை தட்டிவிட்டு வடிவேலுவௌ புலம்பவைக்கும் பரத்

    கோபக்கார தந்தை நாசர் எப்பொழுது எல்லாம் கோபம் வருதோ அப்போதெல்லாம் பரத்தை தூக்கி போட்டு மிதிப்பார். ஈரல் சாப்பிடலைன்னு போட்டு அடிப்பார் ஒரு காட்சியில். அப்போதெல்லாம் இடையில் புகுந்து அவரை காப்பாற்றும் வேலை வடிவேலுக்கு. அந்த நேரத்தில் வடிவேலு அடிக்கும் கமெண்டால் தியேட்டர் நகைச்சுவையால் அதிரும். பல இடங்களில் மச்சான் நாசருக்கும், மருமகனுக்கும் இடையே மாட்டிக் கொண்டு விழிக்கும் பாத்திரமாக வடிவேலு பாத்திரம் இருக்கும். தனது அத்தை மகளை பார்க்க போகும் ஆசையில் வடிவேலு சாப்பிடும் சாப்பாட்டு தட்டை தட்டி விட மாமன்கிட்டையும் மச்சான் கிட்டயும் மாட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே என்று வடிவேல் புலம்பும் காட்சி செம காமெடி.

     வடிவேலு, சரண்யா, பரத் மறக்க முடியாத கோயில் காமெடி

    வடிவேலு, சரண்யா, பரத் மறக்க முடியாத கோயில் காமெடி

    இதேபோல் பல காட்சிகளில் வடிவேலு கலக்கியிருந்தாலும் படத்தில் முக்கியமாக இரண்டு காட்சிகளை சொல்லலாம். ஒன்று எம்டன் எப்பொழுது வெளியூர் செல்வார் என குடும்பமே காத்திருக்க பணம் விஷயமாக அவர் வெளியூர் செல்ல, இதை பயன்படுத்தி தன்னுடைய தாய் வீட்டிற்கு சரண்யா செல்ல, தன் அத்தை மகளை பார்க்கும் ஆசையில் பரத் உடன் செல்ல திடீரென எம்டன் ஊர் திரும்ப இந்த கலவரத்தில் எம்டனிடமிருந்து தப்பிக்க வடிவேலு சரண்யா பரத் அடிக்கும் லூட்டியும் நாசர் கோபத்தை சமாளிக்க சரண்யா அங்கப்பிரதட்சணம் செய்து மயங்கி விழும் காட்சி கிட்டத்தட்ட அந்த காட்சி முடியும் வரை தியேட்டர் சிரிப்பாலையில் இருந்து கொண்டே இருக்கும்.

    ஈகோவை விட்டு மகனுடன் இணையும் தந்தை நாசர்

    ஈகோவை விட்டு மகனுடன் இணையும் தந்தை நாசர்

    இதேபோன்று வடிவேலுவின் தந்தை என்னத்த கன்னையா இறந்த பின்பு வடிவேலு ஊர் திரும்ப அவர் பிணத்தை எரித்து விட்டதாக சொல்வதைக்கேட்டு அண்ணன்களை முறைப்பதும், இடையில் வரும் நாசரை லைட்டாக ஜாடை பேசுவதும், அப்பா எரிக்கப்பட்ட இடத்தை நோக்கி ஓடி அங்கு எரிக்கப்பட்ட நிலையில் இருந்த இன்னொரு பெண்ணின் சாம்பலை எடுத்து முகத்தில் பூசிக் கொண்டு அழுவதும் வடிவேலு படத்தில் எக்ஸ்ட்ரானரி காட்சியாக இதை சொல்லலாம். குடும்பத்திற்குள் என்னதான் பிரச்சினை வந்தாலும் அது சுபத்திலே முடியும் என்பது போல் இரு வீட்டாரும் புறக்கணிக்க தோழியின் தந்தை உதவியுடன் காதல் மனைவியை கைப்பிடித்து ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்து வேலை செய்யும் பரத் அவர் நிலை உயர்ந்து வசதியான வாழ்க்கை ஆரம்பித்தவுடன் மகனை பாசம் இருந்தாலும் ஈகோவால் மகனிடம் நெருங்காமல் இருக்கும் லாசர் பின்னர் படிப்படியாக நெருங்கி இறுதியில் அனைவரும் இணையும் சுகமான காட்சியுடன் படம் முடியும்.

    தமிழ் படங்களில் இப்படிப்பட்ட படங்கள் வராதா?

    தமிழ் படங்களில் இப்படிப்பட்ட படங்கள் வராதா?

    இந்த படத்தின் திரைக்கதை பழைய படங்கள் பாதிப்பில் எவ்வித வன்முறை காட்சிகள் இல்லாமல், வடிவேலுவின் பாத்திரமும் படத்தின் கதையோடு இணைந்து மிக அழகாக சித்தரித்து சுகமாக முடித்து இருப்பதைக்கண்டு இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் திருமுருகன் பெரிதும் பாராட்டப்பட்டார். நடிகர் பரத்துக்கு இது ஒரு நல்ல படமாக அமைந்தது. வடிவேலு முழு நீள படத்தில் குணச்சித்திர பாத்திரத்திலும், காமெடியிலும் கலக்கியது இந்த படத்தில் தான் என்று சொல்லலாம். எம்மகன் படம் வெளியாகி 16 வருடங்கள் உருண்டோடிவிட்டன என்றால் நம்ப முடியவில்லை. தமிழ் படங்களில் இப்படிப்பட்ட படங்கள் அவ்வப்போது வராதா என்கிற ஏக்கம் எழுகிறது.

    English summary
    It has been 16 years since the release of Vadivelu and Saranya's comedy role in Em Magan. The wrestling scenes with Vadivelu Nasser are hilarious. tv screen director Thirumurugan's beautiful screenplay and suitable actors and actresses, the direction made EM Magan a wonderful family film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X