»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கங்கை அமரன் மீண்டும் டைரக்ஷனில் இறங்குகிறார்.

கோழி கூவது, கொக்கரக்கோ, கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கங்கைஅமரன்.

இசையமைப்பாளர் என்ற முகத்தோடு, பாடலாசிரியர், இயக்குனர் என பல முகங்கள் கொண்டவர்.

16 வயதினிலே படத்தில் வந்த செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாட்டை எழுதி தேசிய விருது வாங்கியவர் கங்கை அமரன்.

இசை ஞானியின் இளவலான கங்கை அமரன் நீண்ட காலமாக படங்களை இயக்கவில்லை. மாறாக இசைக் கச்சேரிகளில்பிசியாகிவிட்டார். இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். (கச்சேரிகளில் பாடும் நேரத்தை இவர் எடுத்துக் கொண்டு,ரொம்ப பேசி பிளேடு போடுவது இவரது தனி ஸ்டைல்)

இப்பஐ கச்சேரிப் பக்கமாக ஒதுங்கிவிட்ட கங்கை அமரனை மீண்டும் டைரக்ஷனுக்கு இழுத்து வருகிறார் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜாவுக்கு வாழ்க்கை அமைத்துத் தந்தவர்பஞ்சு தான்.

பஞ்சுவும் நீண்ட காலமாக படம் எதையும் தயாரிக்கவில்லை.

தற்போது பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் கங்கை அமரன் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். கிராமத்துக் கதையை படம்பிடிக்கப் போகும் கங்கை அமரனின் இப்புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

இசையை கங்கை அமரன் அல்லது யுவன் ஷங்கர் ராஜா பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. விரைவில் படப்பிடிப்பைத்தொடங்கப் போகிறார்களாம். ஹீரோயினாக நாட்டுக் கட்டையைத் தேடிக் கொண்டிருக்கிறார் அமர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil