twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |


    காத்துக் காத்து ஒன்றும் நடக்காததால், போரடித்துப் போன, மஞ்சக் காட்டு மைனா காயத்ரி ஜெயராம் இப்போது டிவிக்குத் தாவிவிட்டார்.

    காயத்ரி ஜெயராமுக்கு கோடம்பாக்கம் கைகொடுக்கவே இல்லை. சோட்டா வேடங்கள் என்றாலும் தயார் என்றார். ஒரு பாட்டு போதும் என்றார். அண்ணி வேடம் கூட ஓ.கே. என்றார். ஆனால், எதற்கும் அசைந்து தரவில்லை கோடம்பாக்கத்துக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்.

    போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பங்களாவில் வசிக்கும் இந்த முன்னாள் மிஸ் மெட்ராசுக்கு பணம் பஞ்சமில்லை. ஸோ, அவர் பணத்துக்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கி வர மறுக்கவே ஹீரோக்களும் ஒதுக்கிவிட்டார்கள்.


    மாடலிங் பக்கம் போனார். வருடத்துக்கு 2, 3 சான்ஸ்களே. தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் நினைத்த வரவேற்பு இல்லை.

    வீட்டில் உட்கார்ந்து, உட்கார்ந்து போரடித்துவிடவே, டிவிக்கு வந்துவிட்டார். முதலில் சன் டிவியில் தான் சான்ஸ் கேட்டார். ஆனால், அவர்கள் கே.டிவியில் லூட்டி டைம் என்ற பெயரில் நேயர்களிடம் கலாய்க்கும் நிகழ்ச்சியை நடத்தச் சொல்லிவிட்டார்கள்.

    சன் டிவிக்கு அப்புறம் கூப்பிடுகிறோம் என்று சொல்லிவிட்டார்களாம். கிடைத்த சான்ஸை விடாமல் கே.டிவியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் வருவது போலவே கொஞ்சம் உடை, கொஞ்சும் பேச்சு, அட்டகாச சிரிப்பு என கலகலக்கிறார் காய்த்ரி ஜெயராம்.


    சினிமா ஆசையை இவர் இன்னும் விட்டுவிடவில்லையாம். அந்தத் தேடல் தொடர்ந்து கொண்ட இருக்கிறது. வாழ்க்கையே ஒரு தேடல் தானே காயத்ரி (அட, காயத்ரி பத்தி பேசினால் நமக்குக் கூட கவிதை வருதே!)

    இவர் இப்படி இருக்க, ஸ்டார் விஜய் டிவியில் சலனம் தொடரில் நடித்து வரும் ஷாலினி (மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் மந்த்ரா பேடி ஸ்டைலில் வந்து உட்கார்ந்தாரே) சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

    சிம்புவின் மன்மதன் படத்திலும், நம்பர் 7- ரெயின்போ காலனி படத்திலும் நடித்து வரும் இவருக்கு கன்னடம், தெலுங்குப் படங்களிலும் குட்டி, குட்டி ரோல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X