»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கமே புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. தேர்தல் வந்தால் துண்டு, துக்கடா கட்சிகள் எல்லாம் தங்கள் கட்சிஆபிஸை தூசி தட்டி, மறுபடியும் களமிறங்குவது போல் சின்ன, சின்ன படக் கம்பெனிகள் எல்லாம் மீண்டும்தயாரிப்பில் இறங்கியுள்ளன.

முந்தைய ஆண்டைப் போலவே கடந்த வருடமும் தூள், ஜெயம், அரசு, பார்த்திபன் கனவு, சாமி, காக்க காக்க, காதல்கொண்டேன், திருடா திருடி, பிதாமகன், திருமலை என வரிசையாக படங்கள் வசூலை வாரிக் குவிக்ககோடம்பாக்கமே மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறது.

இந்த வருடமும் விருமாண்டி, ஆட்டோகிராப், எங்கள் அண்ணா என வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.திருட்டு விசிடியை வெல்ல ஆரம்பித்துவிட்ட ஆனந்த வெள்ளத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.

ஸ்டார் வேல்யூவே இல்லாத நடிகர்களை வைத்தும், புதுமுகங்களை வைத்தும் ஏகப்பட்ட புதுப் படங்களுக்கு பூஜைபோட்டு படப்பிடிப்புகளும் நடந்து கொண்டுள்ளன. அத்தகைய படங்களின் லிஸ்ட எடுத்தால்,

முகிலே முத்தமிடு, செம்மண், சூப்பர்டா, புனித பூமி, ராமகிருஷ்ணா, லவ்ஸ், வெடலைப் பட்டாளம், செந்தாழம்பூவே, திருதிரு, ஸ்கூல் பாய்ஸ், கன்னிநிலா, வானம் வசப்படும், அழகா இருக்காங்க, உன்னைக் கண்டேனடி,சேட்டை, ஒருமுறை சொல்லிவிடு, பரவசம், லக், பிள்ளையார்பட்டியும் கந்துவட்டியும், ஜெய்ராம், அம்மா நீங்கநல்லா இருக்கணும், மழைத்துளி மழைத்துளி, ஆகாய ஜன்னல் என்று நீளமாய் போய்க் கொண்டிருக்கிறது அந்தப்பட்டியல்.

கதாநாயகன் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கமும், சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துவந்த பாண்டியராஜனுக்கு மட்டும் மூன்று படங்களில் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

திருதிரு என்ற படத்தில் (பாண்டியராஜனுக்கு பொருத்தமான தலைப்பு) நந்திதாவுடன் இணைந்து நடிக்கிறார்.டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகளான நந்திதா படத்தில் சூப்பர் ஆட்டம் போட்டுள்ளாராம்.

பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் இணைந்து நடிக்கும் சேட்டை படத்தில் விந்தியா, லேகாஸ்ரீ, வினுச்சக்கரவர்த்தி,காந்திமதி, சுஷ்மா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விஜய் என்ற தமிழர்இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் அனைத்தும் ஜெர்மனியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.வசனம் எழுதி இயக்குகிறார் சிவன்.

பாண்டியராஜன் நடிக்கும் அடுத்த படம் பிள்ளையார் பட்டியும், கந்து வட்டியும். இந்தப் படத்தில் கதாநாயகியாகநடிக்கும் காயத்ரிப்பிரியா விளக்கி வைச்ச குத்து விளக்கு போல் அழகாக இருக்கிறார். லோ பட்ஜெட் படம்என்பதால் காயத்ரி கவர்ச்சியிலும் பஞ்சம் வைக்கவில்லை.

இதே போல குணால், சத்யராஜ், பிரபு உள்ளிட்டவர்களுக்குக் கூட மீண்டும் படங்கள் கிடைக்கும் அளவுக்குதயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

எப்படியோ கோடம்பாக்கத்தில் ஜரூராக வேலை நடப்பது சந்தோஷம்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil